குரு தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி நட்பு ராசியான மேஷ ராசியில் நுழைகிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அன்று (சனிக்கிழமை) இரவு 11-48 மணிக்கு மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். இதனால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைஇக்கும்.
மேஷ ராசி: இதுநாள்வரை விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் மேஷ ராசியில் ஜென்ம குருவாக அமரப்போகிறார். மேஷ ராசிக்காரர்களே..ஜென்ம குரு என்று பயப்பட வேண்டாம் குரு அள்ளித்தரப்போகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். சுப பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு வேலை தொடர்பான சில நல்ல தகவல்கள் வரும். பணி இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.
மிதுன ராசி: குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு மேன்மைகளை அள்ளித்தரப்போகிறது. குருவின் ராசி மாற்றம் அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். பொருளாதார நிலையில் நல்ல ஏற்றம் ஏற்படலாம். பெரிய பதவிகளை நீங்கள் பெறக்கூடும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும்.
சிம்ம ராசி: சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பாக்யங்களை அள்ளித்தரப்போகிறார். தடைபட்டு வந்த காரியங்கள் தடைகள் இன்றி நிறைவேறும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நல்ல வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தைத் தரும். கடின உழைப்பின் முழு பலனையும் இந்த வேளையில் பெறுவீர்கள். செயல்களில் வெற்றி உண்டாகும். பெரிய சாதனைகளை செய்வீர்கள்.