முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

Gurupeyarchi 2023 | ஏப்ரல் மாதம் நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் யாருடைய வாழ்க்கையில் கல்யாண யோகம் கைகூடி வரும் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

  • 114

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    நவகிரகங்களில் முக்கியமான கிரகமாக குரு விளங்குகிறது. சுப கிரகமாக கருதப்படும் குருபகவான் தெய்வீகத்திற்கும், வேதாந்த ஞானத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்குகிறார். பொன்னிற மேனியான அவர் மஞ்சள் வஸ்திரத்தை அணிந்து கொண்டு வெள்ளை யானை வாகனத்தில் விண்ணில் வலம் வருகிறார். குரு பகவான் தனது பயணத்தில் ஒரு ராசி மண்டலத்தை கடக்க சுமார் ஓராண்டு ஆகும். அதன்படி, 12 ராசிகளையும் கடந்து வர 12 ஆண்டுகள் ஆகும். குரு பகவான் பெரும்பாலும் எல்லா ராசியினருக்கும் நன்மைகளை செய்யவே விரும்புவார். அப்படியே அவர் கெடுபலன்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் அந்த கெடுபலன் நமக்கு ஒரு படிப்பினையை உணர்த்துவதாகவே இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 214

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    அதாவது ஆசிரியர் மாணவனை கண்டிப்பது போன்றதாகவே அமையும். குரு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு செல்கிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அன்று (சனிக்கிழமை) இரவு 11.48 மணிக்கு மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்யப்போகிறார்.  இதனால் நல்ல வாழ்க்கைத் துணை அமையவும் குரு பகவானின் அருள் தேவை. வெளிநாடு வேலை கிடைக்கவும், விசா கிடைக்கவும் குரு பகவானின் அருள் தேவைப்படுகிறது. குரு பகவான் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் குருவின் பார்வையால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 314

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    மேஷம்: மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு, ஜென்ம குருவாக வரப்போவதால் அற்புதமான பலன்களைத் தரப்போகிறது. தொட்டதெல்லாம் துலங்கும். பொன்னான காலமாகும். பூர்வ புண்ணியத்தை குரு பார்வையிடுகிறார். முன்னோர்களின் ஆசி கிடைக்கும். குழந்தைகளுக்கு திருமண சுபகாரியம் நடைபெறும். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். காதல் மலரும், காதலிப்பவர்களுக்கு வெற்றிகரமாக திருமணத்தில் முடியும். நினைத்த காரியம் நிறைவேறும். வரன் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு திருமணம் கைகூடி வரும்.

    MORE
    GALLERIES

  • 414

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    ரிஷபம் ராசி ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் வருவதால் வீடு வாகன யோகம் கைகூடி வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். குருபகவான் பார்வையால் கடன் பிரச்னைகள் நீங்கும், நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வீடு கட்ட, நிலம் வாங்க லோன் வாங்கலாம். உயர்கல்வி யோகம் கை கூடி வரும்.

    MORE
    GALLERIES

  • 514

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    மிதுனம்: லாப ஸ்தானத்தில் குரு பகவான் வருவது நன்மையை அதிகரிக்கும். வெற்றிகள் தேடி வரும். நீங்கள் தொட்ட காரியம் வெற்றியைத் தேடி வரும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை தொழில் அமையும். இளைய சகோதரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். ஏழாம் வீட்டின் மீது குருவின் பார்வை விழுவதால் திருமணம் கைகூடி வரும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். காதல் திருமணம் கைகூடி வரப்போகிறது.

    MORE
    GALLERIES

  • 614

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    கடகம்: கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி தொழில் வெற்றியைத் தேடி தரப்போகிறார். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோஷன் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பத்தில் வரும் குரு பகவான் பதவி யோகத்தை தருவார். குரு பார்வையால் நல்ல தன வருமானம் வரும், வீடு சொத்து வாங்கலாம். திருமணம் சுப காரியம் நடைபெறும். குடும்ப வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.
    அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

    MORE
    GALLERIES

  • 714

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே.. குரு பகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். 9ஆம் இடம் என்பது தெய்வ வழிபாடுகளையும், சன்னதியையும் குறிக்கும். நிறைய தொலை தூர தெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். தங்க நகைகள் வாங்குவதற்கு ஏற்ற காலகட்டம் இது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. அச்சமும் மனக்குழப்பமும் நீங்கி ஆனந்தம் அதிகரிக்கப்போகிறது. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது. பிள்ளைகளுக்கு திருமணம் சுபகாரியங்கள் நடைபெறும்.

    MORE
    GALLERIES

  • 814

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    கன்னி: உங்களுடைய ராசிக்கு 8ஆம் வீட்டில் குரு பயணம் செய்யப்போகிறார். தொழில் வேலை விஷயங்களில் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், குடும்ப ஸ்தானம், சுக ஸ்தானங்களின் மீது விழுவதால் சுப விரையங்கள் ஏற்படும். நல்ல தனவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும்.

    MORE
    GALLERIES

  • 914

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    துலாம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். குரு பகவானின் நேரடிப் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. கடந்த காலங்களில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலையும், வேலையில் புரமோஷனும் கிடைக்கும். குரு பார்வை நேரடியாக விழுவதால் கோடி கோடியாக பலன்கள் கிடைக்கும். லாப ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை படுவதால் தொழில், வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 1014

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    விருச்சிகம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடம்பில் உள்ள நோய்கள் வெளிப்படும். சிகிச்சை மூலம் எளிதில் குணமடையும். வியாபாரத்தில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச் சந்தை முதலீடுகள் பலன் தராது. கடன் கொடுத்தால் திரும்பி வருவது கடினம். எனவே யாருக்கும் இந்த கால கட்டத்தில் கடன் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையேயான சிக்கல்கள் நீங்கும். வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 1114

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    தனுசு: பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்வதால் புது முயற்சிகளுக்கும் ஆதாயம் உண்டு. நினைத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள். சில பிரச்னையில் இருந்து மீள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. இதுவரை இருந்த மன அழுத்தங்கள் நீங்கும். பதவியில் மாற்றமும் பதவி உயர்வும் கிடைக்கும். குருவின் பார்வை லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானங்களின் மீது விழுகிறது. அப்பாவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் அதிகரிக்கும்.

    MORE
    GALLERIES

  • 1214

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    மகரம்: உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் பயணம் செய்யப்போவதால் வீடு வாங்கலாம். புது வீடு கட்டி குடியேறலாம். சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், தொழில் ஸ்தானம், எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தின் மீது விழுகிறது. நோய்களும் மரணத்திற்கு ஒப்பான கண்டங்களும் நீங்கும். குருவின் பார்வையால் ஏழரை சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் முடிவுக்கு வரப்போகிறது.

    MORE
    GALLERIES

  • 1314

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    கும்பம்: உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்தில் பயணித்த குருபகவான் மூன்றாவது வீடான தைரியம், முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். இளைய சகோதரர்கள் வகையில் சில சங்கடங்கள் வர வாய்ப்பு உள்ளது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிறிய ஆன்மீக பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்னை முடிவுக்கு வரும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். குரு பலன் வந்து விட்டது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டின் மீது விழுவதால் திருமண யோகம் கை கூடி வரப்போகிறது. திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலை தொழிலில் லாபம் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 1414

    குரு பெயர்ச்சி 2023: இந்த 4 ராசிக்காரர்களுக்கு கல்யாணம் கைகூடும்...!

    மீனம்: ஜென்ம ராசியில் இருந்த குருபகவான் குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சிக்கல்கள் நீங்கும். நினைத்த காரியங்கள் வெற்றியடையும். நல்ல தன வரவு வரும். சேமிப்பும் உயரும். திருமண சுபகாரிய முயற்சிகள் கை கூடி வரும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். . உங்கள் ராசிக்கு ஆறு, எட்டு, பத்தாம் வீடுகளின் மீது குருவின் பார்வை விழுவதால் புதிய வேலை கிடைக்கும்.

    MORE
    GALLERIES