முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » குரு பெயர்ச்சி 2023 : பண வரவு… பதவி உயர்வு… ஆரோக்கியம் என பல அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

குரு பெயர்ச்சி 2023 : பண வரவு… பதவி உயர்வு… ஆரோக்கியம் என பல அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

குரு பெயர்ச்சி 2023 - 2024 : குரு பெயர்ச்சி அடுத்த மாதம் 22 ஆம் தேதி நடக்க உள்ளது. மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு செல்லும் குரு பகவான் எந்தெந்த ராசிக்கெல்லாம் யோக பலனைத் தர உள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம்.

 • 17

  குரு பெயர்ச்சி 2023 : பண வரவு… பதவி உயர்வு… ஆரோக்கியம் என பல அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

  நவ கிரகங்களும் பல்வேறு வகையான பலன்களை தரக்கூடியவை. அவை, நல்ல பலனாகவும் இருக்கலாம், அசுப பலன்களாகவும் இருக்கலாம். ஜோதிடத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும், வியாழன் பெயர்ச்சியானது ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. குரு பகவான் மீனத்தில் இருந்து மேஷ ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால், பல ராசிகளை சுப பலன்களை பெற உள்ளனர். மேலும், இந்த நிகழ்வால், நவம-பஞ்சம், கஜலட்சுமி யோகம், புதாதித்ய யோகம் என அதிர்ஷட யோகங்கள் ஏற்பட உள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  குரு பெயர்ச்சி 2023 : பண வரவு… பதவி உயர்வு… ஆரோக்கியம் என பல அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

  குருவின் பார்வை நேரடியாக விழும் ராசி : தனக்காரகன், தேவ குரு, பிரகஸ்பதி என்ற பெயர்களை கொண்டுள்ளவர் குரு பகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதி. குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். பொதுவாக குரு பெயர்ச்சியின் போது அவரின் பார்வை பலன் மிகவும் முக்கியமானதாகக் கவனிக்கப்படும். குரு பகவான் 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்த்து அற்புத பலனைத் தரக்கூடியவர். குரு பகவானின் பார்வை பலன், அமர்ந்திருக்கும் இடத்தைப் பொறுத்து பழங்கள் மாறுபடும். அந்தவகையில், மேஷம், மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் தனுசு ராசியினர் நல்ல பலன்களை பெறுவார்கள்.

  MORE
  GALLERIES

 • 37

  குரு பெயர்ச்சி 2023 : பண வரவு… பதவி உயர்வு… ஆரோக்கியம் என பல அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

  மேஷம் : மேஷ ராசி மற்றும் மேஷ லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி நல்ல பலனை தரும். ஏனென்றால், குரு ஒருவரின் ராசிக்கு வருகிறார் என்றால், அவர் உங்கள் துணையாக இருக்கப்போகிறார் என்று அர்த்தம். இவரின் பார்வை நம்மீது இருந்தால், நாம் செய்யும் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசியில் குரு இருந்தால் திருமணம், நல்ல வேலை என வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உண்டாகும். நிதி நிலை முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 47

  குரு பெயர்ச்சி 2023 : பண வரவு… பதவி உயர்வு… ஆரோக்கியம் என பல அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

  மிதுனம் : தனகாரகனான குரு பகவான் மிதுனத்திற்கு 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளதால், உங்களின் நிதிநிலையில் சிறப்பான முன்னேற்றத்தை நீங்கள் எதிர்பார்க்கலாம். நிதி முன்னேற்றம் பெற நீங்கள் எடுக்கும் எந்த ஒரு செயலும் வெற்றியும், நல்ல லாபமும் கிடைக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு சிறப்பாக கிடைக்கும். குறிப்பாக உங்களின் மூத்த சகோதரர்களின் ஆதரவும், வழிகாட்டுதல்களும் உங்களுக்கு கிடைகும்.

  MORE
  GALLERIES

 • 57

  குரு பெயர்ச்சி 2023 : பண வரவு… பதவி உயர்வு… ஆரோக்கியம் என பல அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

  சிம்மம் : ஒருவர் முந்தைய பிறவியில் செய்த தீய விஷயங்கள் மற்றும் நல்ல விஷயங்களுக்கான பலன்களை முழுமையாக தரக்கூடிய இடம் பாக்கிய ஸ்தானமாகும். அந்தவகையில், சிம்ம ராசிக்கு 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் வியாழன் சஞ்சரிக்க உள்ளார். 9-யில் குரு அமர்வது குரு தரும் பலன்களிலேயே மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது. அதனால் நீங்கள் செய்த நல் வினைக்குளுக்கு ஏற்ற நல்ல பலன்கள் சிறப்பாக கிடைக்கும். அதனால் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு சிறிய முயற்சிக்கும் பெரிய வெற்றி கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 67

  குரு பெயர்ச்சி 2023 : பண வரவு… பதவி உயர்வு… ஆரோக்கியம் என பல அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

  துலாம் : துலாம் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7 ஆம் வீட்டில் குரு பகவான் அடுத்த ஒரு வருட காலத்திற்கு சஞ்சரிக்க உள்ளார். குருவின் நேரடிப் பார்வை உங்கள் ராசி மீது விழுவதால் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்க உள்ளது. நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சியிலும் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். குறிப்பாக வாழ்க்கைத் துணை, தொழில் கூட்டாளி, பங்காளி வகையில் மிகவும் ஒத்துழைப்பும், அனுகூலமும் உண்டாகும். கூட்டுத் தொழில், வியாபாரம் செய்பவர்களூக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணையின் மூலம் நிதி ஆதாயம் உண்டாகும்.

  MORE
  GALLERIES

 • 77

  குரு பெயர்ச்சி 2023 : பண வரவு… பதவி உயர்வு… ஆரோக்கியம் என பல அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!

  தனுசு : குரு பகவான் தரக்கூடிய கோடீஸ்வர யோகம் பெற உள்ள மற்றொரு ராசி தனுசு. ஏனெனில் உங்கள் ராசிக்கு 5 ஆம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர உள்ளார். குருவின் 9 ஆம் பார்வை ராசி மீது விழுவதும், ராசிக்கு 5-யில் குரு அமர்ந்திருப்பதும் கூடுதல் விசேஷம். குரு இருக்கும் இடத்திலிருந்து 9ம் இடத்தில் இருக்கும் கிரகமாக இருந்தாலும் சரி, ராசியாக இருந்தாலும் சரி அது பல விதத்தில் நற்பலன்கள் பெறக்கூடியதாக இருக்கும்.

  MORE
  GALLERIES