முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

Guru Peyarchi Palangal 2023 : குரு பெயர்ச்சி வரும் 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. குருவின் அருளால் சில ராசிக்காரர்களுக்கு, பண வரவு, திருமண யோகம், உத்தியாக உயர்வு என அனைத்து பலன்களையும் பெறுவார்கள். இந்த குரு பெயர்ச்சி பெண்களுக்கு எப்படி இருக்கும் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • 114

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    சோபகிருது வருடம் சுசித்திரை மாதம் 9 ஆம் தேதி (ஏப்ரல் 22, 2023) சனிக்கிழமை அன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் 1 ஆம் பாதத்தில் மேஷராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் நேரடியாக விழுகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த வார்த்தையை போல குரு பகவான் தன் பார்வைபலத்தால் மக்களுக்கு நற்பலன்களை வழங்குவார்.

    MORE
    GALLERIES

  • 214

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    குருவின் பார்வையைப் பெறும் மூன்று ராசிகள்: சிம்மம், துலாம், தனுசு ஆகிய மூன்று ராசிகளும் குருவின் பார்வையை பெறுவதால், இந்த ஆண்டு இவர்களுக்கு மிகவும் அற்புதமான ஆண்டாக அமைய உள்ளது. கடகம், கன்னி, விருச்சிகம் ஆகியவை குரு தன் ஸ்தானத்தைப் பார்க்கும் ராசிகள். எனவே, மேற்கண்ட ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும், பணவரவு திருப்தி தரும். பதவி உயர்வு, செல்வாக்கு உயரும். இந்த குறு பெயர்ச்சி பெண்களுக்கு எப்படி இருக்கும் என பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 314

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    மேஷ ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி விரயங்களை அதிகரிக்கச் செய்யும். வீடு மாற்றங்களாலும், இட மாற்றங்களாலும் மன அமைதி குறையும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளின் இல்லங்களில் நடைபெறும் விழாக்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கான சுபகாரியங்களை காலா காலத்தில் முடிக்க வேண்டுமென்று அக்கறை செலுத்துவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். இருப்பினும் உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு.

    MORE
    GALLERIES

  • 414

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக கொஞ்சம் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றங்கள், இடமாற்றங்கள் இனிமை தரும் விதம் அமையும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் ஏற்படும். ஆன்மிகப் பயணங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். உங்கள் பெயரிலேயே அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பழைய ஆபரணங்களைக் கொடுத்துவிட்டுப் புதிய ஆபரணங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு இதுவரை தடைப்பட்ட பதவி உயர்வு தானாக வந்து சேரும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களால் உற்சாகமடைவீர்கள்.

    MORE
    GALLERIES

  • 514

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    மிதுன ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியின் விளைவாக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். உறவினர்களின் உதவி யும் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்கும். மண மாலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாலையும், உத்தியோகத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வேலையும் கிடைக்கும். திருமணமானவர்களுக்கு கணவன்-மனைவி உறவில் ஒற்றுமை பலப்படும். குடும்ப நிர்வாகத்தை திறம்படச் செய்து புகுந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பீர்கள். அசையாச் சொத்துக்கள் உங்கள் பெயரில் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு திறமைக் குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 614

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    கடக ராசியில் பிறந்த பெண்களுக்கு பணப் பற்றாக்குறை அதிகரிக்கும். பாசம் மிக்க உறவி னர்கள் உங்களை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இடமாற்றங்கள் இனிமை தருவ தாக அமையும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் இருக்க ஒருவரை ஒரு வர் புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. உணர்ச்சி வசப்பட்டுப் பேசுவதைத் தவிர்க்கவும், தாய்-தந்தை உடல்நலத்தில் கவனம் தேவை. உடன்பிறப்புகளின் வழியே சுபகாரியம் முடிவா கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள். பணிபுரியும் பெண் களுக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கள் கிடைக்கும். உயர்மட்ட அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளை வழங்குவர்.

    MORE
    GALLERIES

  • 714

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அற்புதப் பலன்களை அள்ளி வழங்கப் போகின்றது. அமைதியும், ஆனந்தமும் இல்லத்தில் குடிகொள்ளும். வருமானம் எதிர் பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக கிடைக்கும். கணவன்-மனைவி உறவில் பாசமும், நேசமும் அதிகரிக்கும். தாய் வழியிலும், உடன்பிறப்புகள் வழியிலும் ஓரளவு உதவி கிடைக்கும். பிள்ளை களின் கல்யாணத்தை முன்னிட்டு சீர்வரிசை பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர் கள். சுபச்செலவுகள் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்குப் பல நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு இப்பொழுது கிடைக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 814

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    கன்னி ராசியில் பிறந்த பெண்களுக்கு முன் னேற்றப் பாதையில் சில முட்டுக்கட்டைகள் வந்து சேரும். வரன்கள் தள்ளிப் போகலாம். கடின முயற் சிக்குப் பின்னரே சில காரியங்கள் கைகூடலாம். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதன் மூலமே அமைதி காண இயலும். பணநெருக்கடி கள் ஏற்பட்டாலும், கடைசி நேரத்தில் காரியம் கைகூடிவிடும். பிள்ளைகளின் சுபகாரியங்கள் நிறைவேறப் பெரும் முயற்சி எடுக்கும் சூழ்நிலை உருவாகும். நீண்டதூரப் பயணங்கள் மனக்கிலே சத்தை அதிகரிக்கச் செய்யும். திட்டமிட்டுச் செலவு செய்வதன் மூலமே திருப்தியான வாழ்வை அமைத்துக் கொள்ள இயலும்.

    MORE
    GALLERIES

  • 914

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    துலாம் ராசியில் பிறந்த பெண்களுக்கு குரு வின் நேரடிப் பார்வை பதிவதால் உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். உட னிருப்பவர்களும், உறவினர்களும் ஆதரவு தரு வர். உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும். கணவன்-மனைவிக்குள் பிணக்கு கள் அகன்று இணக்கம் ஏற்படும். பிள்ளைகளின் கல்யாணத்தை மிகச்சிறப்பாக நடத்தி முடிப்பீர் கள். உங்கள் பெயரிலேயே வீடு அல்லது இடம் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண் களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். தள்ளிப்போன பதவி உயர்வு தானாக வந்து சேரும்.

    MORE
    GALLERIES

  • 1014

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    விருச்சிக ராசியில் பிறந்த பெண்களுக்கு திட்ட மிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தேவைக்கேற்ற பணம் அவ்வப்போது வந்து கொண்டேயிருக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை யும், மழலையின் ஓசையும் கேட்கும் சூழ்நிலை உண்டு. கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக் கும். பிள்ளைகளின் மேற்படிப்பு தொடரும். அவர் களின் சுபகாரியங்கள் நடைபெறுவதற்காக எடுத்த முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு மேலிடத்தில் பாராட்டுக்களும், திறமைக்குரிய அங்கீகாரமும் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 1114

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    தனுசு ராசியில் பிறந்த பெண்ளுக்குத் தடைகள் அனைத்தும் விலகும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். உங்கள் பெயரிலேயே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. உடன்பிறந்தவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பிள்ளை களின் திருமணம் போன்ற சுபகாரியங்கள் திருப்தி யாக நடைபெறும். மூதாதையர்களின் சொத்துக் களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். இல்லத் துப் பூஜையறையில் குரு தட்சிணாமூர்த்தி படம் வைத்து குரு கவசம் பாடி வழிபடுவது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 1214

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு உடல்நலத் தில் அதிக கவனம் தேவை. மாறி மாறி தொல்லை வந்து கொண்டிருக்கிறதே என்று கவலைப்படுவீர் கள். இடமாற்றம் செய்யலாமா என்ற சிந்தனை மேலோங்கும். உடன் இருப்பவர்களாலும், குடி யிருக்கும் வீட்டாலும் சில பிரச்சினைகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். குழந்தை களின் சுபகாரியங்கள் காலாகாலத்தில் நடை பெறும். குலதெய்வ வழிபாடும் குடும்பமுன்னேற் றத்திற்கு வித்திடும். பணிபுரியும் பெண்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வரலாம். திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 1314

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி சாதகமான பெயர்ச்சியாகவே அமைகின்றது.பொருளாதாரத்தில் இருந்த பற்றாக் குறை அகலும். கல்யாணம் போன்ற சுபகாரியங் கள், பெற்றோரின் மணி விழா போன்றவைகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு. தம்பதியர் ஒருவரை யொருவர் புரிந்துகொண்டு செயல்பட்டால் சச்சரவு வராமல் பார்த்துக் கொள்ளலாம். குருவின் வக்ர காலத்தில் கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு பதவி உயர்வு, ஊதிய கூடிய இடமாற்றம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடும், குரு வழி பாடும் நன்மை தரும்.

    MORE
    GALLERIES

  • 1414

    குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : இந்த ராசி பெண்களுக்கு குருவின் அருளால் மண மாலையும்… நல்ல வேலையும் கிடைக்கும்!

    மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு குருப் பெயர்ச்சியின் விளைவாகத் தடைகள் அகலும். தனவரவு திருப்தி தரும். கணவன்-மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். ஏதேனும் ஒரு துறையில் சாதனை படைக்க சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். பிள்ளைகளை நெறிப்படுத்தி உங் கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. குருவின் வக்ர காலத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ஏழரைச் சனி நடப்பதால் எதிலும் கொஞ்சம் நிதானம் தேவை. விரயங்களை சுபவிரய மாக மாற்றிக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய இட மாற்றம் கிடைக்கலாம்.

    MORE
    GALLERIES