குரு பெயர்ச்சி 22 ஏப்ரல் 2023 சித்திரை 9 ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. இந்த பெயர்ச்சியின் போது குருவின் பார்வையை பெரும் ராசிகள், வேலைவாய்ப்பு, திருமணம், தொழில், குழந்தைப்பேறு, பணவரவு, சொத்து என சகல சௌபாக்கியமும் பெறுவார்கள். இருப்பினும் சில ராசிக்காரகள் குருவின் சுப பலன்களை பெற முடியாமல் போகலாம். அந்தவகையில், எந்த விஷயங்கள் பிரச்சினை தரக்கூடியதாக இருக்கும், குருவின் பொது பலன் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.
குரு பெயர்ச்சியின் தாக்கம் : மங்களம் பொருந்திய சோபகிருது ஆண்டில், குரு பகவான் ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.24 மணி மீன ராசி ரேவதி நட்சத்திரத்திலிருந்து மேஷ ராசியில் உள்ள அசுவினி நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சி ஆக உள்ளார். அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பெயர்ச்சி செய்யும் குருவின் பார்வையானது 5, 7, 9 ஆகிய வீடுகளில் நேரடியாக விழுவதால், சிம்மம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளுக்கு நல்ல பலன்களை வழங்குவார். மேலும், மேஷத்தில் சூரியன் உச்சம் பெறுவதால், சூரியன் புதனுடன் சேர்ந்து புதாதித்ய யோகம் உருவாக்குகிறார். குருவின் பெயர்ச்சியால் நாட்டிற்கும், வீட்டிற்கும் பலவகையில் நன்மைகளைத் தருபவராக விளங்குவார்.
குருவின் அருள் யாருக்கு கிடைக்கும் : குருவின் 5 ஆம் பார்வை சிம்ம ராசி மீதும், 7 ஆம் பார்வை துலாம் ராசி மீதும், 9 ஆம் பார்வை தனுசு ராசி மீதும் விழுவதால் இந்த மூன்று ராசியினருக்கு சிறப்பான பலன்களை வழங்க உள்ளார். இது தவிர, கடகம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கும் குருவின் நல்லருள் ஓரளவிற்கு கிடைக்கும். அதாவது, தொட்டது துலங்கும், காரியத் தடை நீங்கும், தொல்லைகள் விலகும், நிதி நிலை மேம்படும், பதவி, சம்பளம் உயர்வு கிடைக்கும்.
குருவின் அருள் எந்த ராசிக்கு கிடைக்காது? : குரு மேஷ ராசிக்கு சஞ்சாரம் செய்யும் போது, மேஷத்தில் குரு பெயர்ச்சி ஆகும் போது குரு மேஷத்திற்கு ஜென்ம குருவாகவும், கன்னிக்கு அஷ்டம் குருவாகவும், மகரத்திற்கு அர்த்தாஷ்டம குருவாகவும், ரிஷபத்தில் விரய குருவாகவும் அமர்கிறார். எனவே, இந்த ராசியினர் சற்று கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பெரும்பாலும் திருமணம் சமந்தமான பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, எந்த விஷயங்களை செய்தாலும் சற்று கவனத்துடன் செய்வது நன்மை தரும்.
நோய் தொற்று ஆபத்து : சுப கிரகமான குரு பகவான் மேஷ ராசியில் நிழல் கிரகம், அசுப கிரகமான ராகுவுடன் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளதால், இந்த காலத்தில் நோய் தொற்று சற்று தீவிரமாக பரவுவதற்கான சூழ்நிலைகள் உருவாகலாம். சனியின் பார்வையும் ராகு மீது பதிவதால்சனிமீண்டும் 24 ஆகஸ்ட் 2023-ல் மகரத்திற்கு வக்ரமாகி வரும்வரை மக்கள் அனைவரும் மிகமிக கவனத்தோடு இருக்க வேண்டும். நெருப்பு கிரகமான சூரியனோடு ராகு இணைந்திருப்பதால் உஷ்ணாதிக்க நோய், காய்ச்சல் போன்றவை வேகமாகப் பரவக்கூடிய சூழ்நிலை உண்டு. முகக் கவசம் அணிவதுமட்டுமல்லாமல் சுகாதாரத்துறை சொல்லும் வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதோடு, ஜூரஹூ ரேஸ்வரர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.
பொருட்களின் விலைவாசி உயருமா? : குருவின் பெயர்ச்சி காரணமாக பொருட்களின் விலை அதிகரிக்கும். குறிப்பாக உணவுப் பொருள், காய்கறி, பருப்பு, வெள்ளை நிற பொருட்கள் என அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகம். குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. தங்கம், வெள்ளியின் விலை எப்பொழுதும் போல ஏற்ற இறக்கத்திலேயே இருக்கும். இரும்பு, மருந்து, மரம், கட்டுமானப் பொருட்களை விற் பனை செய்பவர்கள் லாபம் குவிப்பர். எழுத்துத் துறை, பத்திரிக்கைத் துறை, கலைத்துறை சம்பந்தப்பட்டவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர்.
குருவின் வக்ர காலம் மற்றும் செவ்வாய்-சனி பார் வைக் காலங்களில் இயற்கை சீற்றங்கள், நில நடுக்கங் கள், மழை வெள்ளம், நெருப்புப் பாதிப்பு போன்றவைகளில் இருந்து நாம் விடுபட கூட்டுப் பிரார்த்தனைகளை மேற் கொள்வது நல்லது. அல்லது அவரவர் எல்லை தெய்வங் களை முறையாக வழிபடுவதும் பலனளிக்கும். வழிபாடு : நோய் தொற்றிலிருந்து நாம் மீள, பாதிப்பின்றி இருக்க ஜூரஹரேஸ்வரர் வழிபாடு செய்வதும், உங்கள் குல தெய்வத்தை வழிபடுவது, எல்லை தெய்வங்களை வணங்குவது மிகவும் நல்லது.