ஒரு ஜாதகத்தில் ராகுவும் வியாழனும் சேர்ந்திருந்தால் குரு சண்டாள யோகம் உண்டாகும். குரு சண்டாள யோகம் எதிர்மறையான (அசுப) யோகங்களில் ஒன்று. குரு சண்டாள யோகம், குருவும் ராகும் ஒரே ராசியில் சேர்ந்திருக்கும் போது உருவாகும். அதாவது, நிழல் கிரகமான ராகுவை, ஒளி கிரகமான குரு பார்ப்பதால் (Guru Rahu Combination) இந்த யோகம் உருவாகிறது. இதனால், பலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். என்னதான் இது திடீர் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தினாலும், சில ராசிகளுக்கு தடை, பிரச்சினைகளையும் தர வாய்ப்புள்ளது.
குரு சண்டாள யோகம் எப்போது உருவாகிறது : குரு பகவான் ஏப்ரல் 22 ஆம் தேதி மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். அங்கு ஏற்கனவே சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் சர்ப்ப கிரகமான ராகுவுடன் சேர உள்ளார். இதனால் குரு சண்டால யோகம் உருவாகிறது. இந்த யோகம் ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பெயர்ச்சி ஆனதிலிருந்து, ராகு மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகும் வரை சுமார் 6 மாதங்களுக்கு மேலாக இந்த யோகம் இருக்கும். இந்த கிரக சேர்க்கையானது சில ராசியினருக்கு மோசமான பலன்களையே தர உள்ளார். இந்த குரு சண்டாள யோகத்தால் அசுப பலனைப் பெற உள்ள 5 ராசிகள் யார் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
மேஷம் : மேஷ ராசியிலேயே குரு சண்டாள யோகம் உருவாவதால், ஜென்ம குரு சுப காரியங்கள் கைகூடும். குரு சண்டாள யோகத்தால் உங்களின் பொருளாதார நிலை சற்று பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நீங்கள் பணிபுரியும் துறையில் சில சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இதனால், வாழ்க்கையில் பல பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும். ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். ஏனென்றால், அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் செய்யும் வேலையில் திருப்திகரமான மன நிலை இருக்காது. மனதில் ஏதேனும் ஒரு அதிருப்தி, கவலை இருந்து கொண்டே இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம் : மிதுன ராசிக்காரர்கள் அடுத்த 6 மாத காலங்களுக்கு மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யும் முன் சரியான ஆலோசனையும், கவனமுடனும் இருப்பது நல்லது. மங்களகரமான செய்திகள் உங்களின் காதுகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளை சந்திப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறைவாகவே இருக்கும். பணியிடத்தில் அவசரப்படாமல் நிதானத்துடன் வேலை செய்யுங்கள்.
கன்னி : குரு சண்டாள யோகம் கன்னி ராசிக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 6 மாத காலத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், உங்களின் மனம் ஏதேனும் சில விஷயங்களை நினைத்து மன அழுத்தத்துடனேயே காணப்படும். மன அமைதிக்காக இறை வழிபாடு செய்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் சில விரும்பத்தகாத விஷயங்கள் அல்லது வாக்குவாதங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. குரு 8-ல் இருப்பதால் பண விஷயத்தில் சற்று நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீடு, வாகனம் அல்லது பிற சொத்துக்கள் வாங்குவதில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு : தனுசு ராசிக்காரர்கள் குரு சண்டாள யோகத்தால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வாகனம் ஓட்டும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தனுசு ராசிக்கு 5-யில் குரு அமர்வதால் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும். குருவின் மூலம் மிகவும் சிறப்பான பலன் கிடைக்கும் என்றாலும், ராகுவுடன் சேர்ந்திருப்பதால் எந்த ஒரு வேலையிலும் சில தடைகள், பிரச்னைகளுக்கு பின்னரே சிறப்பான வெற்றியைப் பெற முடியும். உங்களின் செலவுகளை சரியாக திட்டமிட்டு செய்வதால் மட்டுமே உங்களால் சேமிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் உங்கள் வேலையில் சற்று அதிருப்தி, பிடிக்காத மன நிலையில் இருப்பீர்கள். ராகு பெயர்ச்சிக்குப் பின் உங்களுக்கு பல விதத்தில் மேன்மை உண்டாகக்கூடிய காலமாக இருக்கும்.
மகரம் : மகர ராசியினருக்கு 4 ஆறாம் வீடான சுக ஸ்தானத்தில் குரு அமர்வதால் திடீர் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த 6 மாத காலத்தில் உங்களின் பயணத்தின் போது கவனமாக இருப்பது நல்லது. மனதளவில் பலவிதமான குழப்பங்களை சந்திக்க நேரிடும். சில பழைய யோசனைகளால் கணவன்-மனைவி இடையே மனக்கசப்பு ஏற்படும். இதனால் திருமண வாழ்க்கை சற்று மோசமானதாக இருக்கும். இந்த காலத்தில் பேச்சு, செயலில் கவனமாக நிதானமாக இருந்தால் மேன்மையைச் சந்திக்கலாம்.