குரு பகவான் இன்று காலை (ஏப்ரல் 22, 2023) காலை 5.14 மணியளவில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் பெயர்ச்சி ஆகி உள்ளார். இவர் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி மேஷ ராசியிலேயே அதிசார பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார். 2023 டிசம்பர் 31 ஆம் தேதி மீண்டும் வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்கதி பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார். 2024 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி வரை மேஷத்தில் இருக்கும் இவர், மே 2 ஆம் தேதி மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சி செய்வார். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் நேரடியாக விழுவதால் சிம்மம், துலாம், தனுசு ராசிக்கு கூடுதல் சுப பலன்கள் கிடைக்கும். மேஷ குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படி இருக்கும் என சுருக்கமாக பார்க்கலாம்.
துலாம் : குரு பெயர்ச்சியால் காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும்.
மீனம் : குரு பெயர்ச்சியால் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம். முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.