முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » ஏப்ரலில் உருவாகும் குரு சண்டாள யோகம் : இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது!

ஏப்ரலில் உருவாகும் குரு சண்டாள யோகம் : இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது!

ஏப்ரல் மாதத்தில் பல கிரக மாற்றங்கள் நடைபெற உள்ளது. அந்தவகையில், சூரிய பெயர்ச்சி, தமிழ் புத்தாண்டு, குரு பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி, புதன் வக்ர பெயர்ச்சி என 4 முக்கிய கிரக பெயர்ச்சி நடக்க உள்ளது.

 • 17

  ஏப்ரலில் உருவாகும் குரு சண்டாள யோகம் : இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது!

  ஏப்ரல் மாதம் ஜோதிட ரீதியில் மிகவும், முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது. மாதத் தொடக்கத்தில் நடைபெறும் சுக்கிரன் பெயர்ச்சியை தொடர்ந்து சூரியன் சஞ்சாரம், தமிழ் புத்தாண்டும், புதன் வக்ர பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என அடுத்தடுத்து முக்கிய நிகழ்வுகள் நடக்க உள்ளன. இதை தொடர்ந்து, மேஷத்தில் புதன், ராகு, சூரியன், குரு ஆகியவை இணைந்திருப்பதால் குரு சண்டாள யோகம் உருவாகிறது.

  MORE
  GALLERIES

 • 27

  ஏப்ரலில் உருவாகும் குரு சண்டாள யோகம் : இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது!

  ஏப்ரல் மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள் : ஏப்ரல் 6 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார். ஏப்ரல் 14 ஆம் தேதி சூரிய பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகி உச்சம் அடைய உள்ளார். ஏப்ரல் 21 ஆம் தேதி புதன் பகவான் மேஷத்தில் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ள உள்ளார். ஏப்ரல் 22 ஆம் தேதி குரு பகவான் மீனத்திலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஏப்ரல் மாதத்தில் சூரியன் உச்சம் அடைதலும், குரு நட்பு வீட்டிற்கு மாறுதல், சுக்கிரன் தன் சொந்த வீடான ரிஷபத்தில் ஆட்சி பெறுதல் என முக்கிய கிரக நிகழ்வுகள் நடைபெறும்.

  MORE
  GALLERIES

 • 37

  ஏப்ரலில் உருவாகும் குரு சண்டாள யோகம் : இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது!

  ரிஷபம் : ரிஷப ராசிக்கு ஏப்ரல் மாதம் சிறந்த மாதமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் முன்னெடுக்கும் எந்த ஒரு வேலையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உங்கள் வேலையில் இருந்த சிக்கல்கள் தீரும். குடும்பத்தினரின் உதவியும் கிடைக்கும். உங்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். வருமானம் சிறப்பாக கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் கௌரவம் உயரும். இருப்பினும் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

  MORE
  GALLERIES

 • 47

  ஏப்ரலில் உருவாகும் குரு சண்டாள யோகம் : இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது!

  மிதுனம் : மிதுன ராசிக்கு இந்த மாதம் பல சுப பலன்கள் கிடைக்கும். ராகுவுடன் குரு சேர்வதால் உங்களின் செல்வாக்கும், சுயமரியாதையும் அதிகரிக்கும். இந்த மாதம் உங்களின் தைரியம் அதிகரிக்கும். உங்களின் தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு உதவ நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள். இருப்பினும், இந்த மாதத்தில் உங்கள் ஆரோக்கியம் கவனம் செலுத்துவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 57

  ஏப்ரலில் உருவாகும் குரு சண்டாள யோகம் : இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது!

  கடகம் : கடக ராசிக்கு ஏப்ரல் மாதம் மிக சிறப்பானதாக இருக்கும். உங்களின் செயல்பாடு வேகமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். அதனால் உங்களின் தடைப்பட்ட வேலைகளை வேகமாக முடிப்பீர்கள். உங்களின் செயல்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குடும்ப பணிகளும், குடும்ப பொறுப்புகளும் அதிகரிக்கும். இந்த மாதத்தில் ஒரு புதிய நபரின் தொடர்பு கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 67

  ஏப்ரலில் உருவாகும் குரு சண்டாள யோகம் : இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது!

  கும்பம் : கும்ப ராசிக்கு இந்த ஏப்ரல் மாதம் பல விதத்தில் சிறப்பான பலனை அனுபவிக்க முடியும். இந்த மாதத்தில் நடக்கும் கிரக மாற்றத்தால் தடைப்பட்ட வேலைகளில் சிறப்பான வெற்றியைப் பெற முடியும். இந்த மாதத்தில் உங்களின் நண்பர்களின் உதவியால் குடும்ப சூழலிலும், பணியிடத்திலும் சாதக பலனைப் பெறலாம். எடுத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும். சொத்து சார்ந்த விஷயங்களில் மற்றவர்கள் தலையிடலாம். நிலைமை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 77

  ஏப்ரலில் உருவாகும் குரு சண்டாள யோகம் : இந்த 5 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது!

  மீனம் : ஏப்ரல் மாதத்தில் நடக்கும் முக்கிய கிரக அமைப்பும், கிரக நிலையின் காரணமாக மீன ராசியினருக்கு நிதி விஷயங்களில் மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்களே நினைத்துப் பார்க்காத அளவு வெற்றியைப் பெறலாம். ராசி அதிபதி குரு ராசிக்கு 2-யில் தன ஸ்தானத்திற்கு செல்லும் போது வருமானம் உயரும். நல்ல செய்திகளைப் பெறலாம். உங்கள் மனதிற்கு மகிழ்ச்சியான செயல்கள் நடக்கும்.

  MORE
  GALLERIES