முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » ஒரே ராசியில் 5 கிரகங்களின் மகா சேர்க்கை: கோடியில் புரளபோகும் 5 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

ஒரே ராசியில் 5 கிரகங்களின் மகா சேர்க்கை: கோடியில் புரளபோகும் 5 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

Planetary Conjunction: சைத்ரா நவராத்திரி இம்முறை 5 கிரகங்களின் மகா சங்கமத்துடன் தொடங்குகிறது. மீன ராசியில் வியாழன், சூரியன், சந்திரன், புதன், நெப்டியூன் ஆகிய 5 கிரகங்களும் ஒன்றாக இருப்பது சிறப்பான நிகழ்வு. இதனால், மீனத்தில் பல சுப யோகங்கள் உருவாகின்றன. சைத்ரா நவராத்திரியில் உருவாகும் ஐந்து கிரகங்களின் சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

  • 17

    ஒரே ராசியில் 5 கிரகங்களின் மகா சேர்க்கை: கோடியில் புரளபோகும் 5 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

    சைத்ரா நவராத்திரி மார்ச் 22 முதல் தொடங்குகிறது. அதுமட்டும் அல்ல, சைத்ரா நவராத்திரி தொடங்கும். அதே நாளில் உகாதி மற்றும் 5 கிரகங்களின் மகா சேர்க்கையும் நடைபெற உள்ளது. மீனத்தில் வியாழனுடன் சூரியன், புதன், சந்திரன் மற்றும் நெப்டியூன் கிரகங்கள் ஒன்றாக இருக்கும். மீனத்தில் இந்த 5 கிரகங்கள் ஒன்றாக இருப்பதால் புத்தாதித்ய யோகம், கஜகேசரி யோகம் மற்றும் ஹம்ச யோகம் உருவாகும். ஜோதிட ரீதியாக, இந்த கிரகங்களின் சேர்க்கை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 27

    ஒரே ராசியில் 5 கிரகங்களின் மகா சேர்க்கை: கோடியில் புரளபோகும் 5 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

    மீனத்தில் இருக்கும் சூரியன், சந்திரன், வியாழன், புதன் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றின் பார்வையானது நேரடியாக கன்னி ராசி மீது விழுவதால், நல்ல பலன்களை கொடுக்கும். அதாவது, கல்வி, பொருளாதாரம், மகிழ்ச்சி, சமூக அந்தஸ்து ஆகிய பல பலன்களை கொடுக்கும்.  சில ராசிகளுக்கு பணம் சேர்க்கை உண்டாகும். குறிப்பாக பணப்புழக்கம் கோடியில் புரளப்போகும் வாய்ப்பும் உள்ளது. இந்த 5 கிரகங்களின் சேர்க்கை எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 37

    ஒரே ராசியில் 5 கிரகங்களின் மகா சேர்க்கை: கோடியில் புரளபோகும் 5 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

    மிதுனம் : மிதுனம் இந்த முறை மீனத்தில் ஏற்படும் கிரகங்களின் சேர்க்கையால் சிறப்பான பலன்களை பெரும். அன்னை துர்காவின் ஆசியுடன் தொழில் மற்றும் வியாபாரத்தில் சில புதிய வாய்ப்புகளைப் பெறலாம். அதே நேரத்தில் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். அனைவரின் ஆதரவும் உங்களுக்கு கிடைப்பதால், குடும்பத்தினருடனான உறவுகள் இனிமையாக இருக்கும். அன்புக்குரியவர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் வரலாம்.

    MORE
    GALLERIES

  • 47

    ஒரே ராசியில் 5 கிரகங்களின் மகா சேர்க்கை: கோடியில் புரளபோகும் 5 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

    கடகம் : 5 கிரகங்களின் மகா சேர்க்கையால் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். நீங்கள் வேலையில் பதவி உயர்வு மற்றும் உங்கள் சம்பள உயர்வு பற்றிய செய்திகளை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும் மற்றும் அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து துர்க்கையை வழிபட்டால், அன்னை துர்க்கையின் முழு ஆசியும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாள் வராமல் இருந்த பணம் உங்கள் கைக்கு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    ஒரே ராசியில் 5 கிரகங்களின் மகா சேர்க்கை: கோடியில் புரளபோகும் 5 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

    கன்னி : கன்னி ராசிக்காரர்கள் கிரக சேர்க்கையின் தாக்கத்தால் நிதி விஷயங்களில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். இந்த நவராத்திரியில் நீங்கள் புதிய சொத்து அல்லது வீடு வாங்கலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரியுடன் நீங்கள் நல்ல இணக்கத்துடன் இருப்பீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காரியம் இனிதே நிறைவேறும். இந்த காலத்தில், பெண்கள் புதியதாக தங்க நகைகள் வாங்குவார்கள். முடிவு எடுப்பதில் சற்று கவனம் தேவை. இல்லையெனில், லாபத்திற்கு பதிலாக நஷ்டம் ஏற்படலாம்.

    MORE
    GALLERIES

  • 67

    ஒரே ராசியில் 5 கிரகங்களின் மகா சேர்க்கை: கோடியில் புரளபோகும் 5 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

    விருச்சிகம் : விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கை தொடர்பான ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். கிரக சேர்க்கைகள் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுத்தாலும், உங்கள் தொழில் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு, நல்ல ஆஃபர் தேடி வரும். வியாபாரம் ரீதியாக நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நிதி நிலை வலுவாக உள்ளது மற்றும் புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    ஒரே ராசியில் 5 கிரகங்களின் மகா சேர்க்கை: கோடியில் புரளபோகும் 5 அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்!

    மீனம் : குருவின் ராசியான மீன ராசிக்காரர்களுக்கு துர்க்கை மாதாவின் சிறப்பு ஆசி கிடைப்பதுடன், உங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணத்தை முதலீடு செய்ய இது சரியான நேரம் மற்றும் எதிர்காலத்தில் நீங்கள் லாபம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில், உங்கள் தொழில் சம்பந்தமாக நீங்கள் ஒரு பெரிய முடிவை எடுக்கலாம், மேலும் இந்த முடிவு உங்களுக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும்.

    MORE
    GALLERIES