முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு?... இந்த ராசிக்காரர்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போடப்போறாங்க!

குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு?... இந்த ராசிக்காரர்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போடப்போறாங்க!

குரு பெயர்ச்சி அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 22 அன்று நடக்க உள்ளது. குருவின் அருளால் எந்த ராசியினருக்கு திருமண யோகம் இந்தாண்டு உருவாகும் என பார்க்கலாம்.

  • 18

    குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு?... இந்த ராசிக்காரர்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போடப்போறாங்க!

    குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். அந்தவகையில், நவகிரகங்களின் மிகவும் சுபத்துவம் வாய்ந்த கிரகணம் குரு பகவான். ஒருவருக்கு திருமணம் நடக்க, திருமண சுகத்தை அனுபவிக்க காரணமாக இருக்கக்கூடியவர் சுக்கிரன். ஆனால், அந்த திருமணம் நல்ல மேஜரையில் நடக்கவோ அல்லது குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கவோ, தொழில் வெற்றி, பதவி உயர்வு, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட எந்த ஒரு சுப காரியங்கள் நடக்க வேண்டுமானாலும் அதற்கு குரு பகவான் சாதகமாக இருக்க வேண்டியம். அப்படி ஜோதிடத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த குரு தற்போது மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளதால் எந்தெந்த ராசி, லக்கினக்காரர்களுக்கு திருமணம் கைகூட வாய்ப்புள்ளது என காணலாம்.

    MORE
    GALLERIES

  • 28

    குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு?... இந்த ராசிக்காரர்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போடப்போறாங்க!

    குரு அருளும் திருமண யோகம் : குரு பகவானுக்கு 5, 7, 9 ஆகிய இடங்கள் புண்ணிய ஸ்தானமாக கருதப்படுகிறது. பொதுவாக திருமணம் நடக்க ஒரு ஜாதகத்தில் 7 ஆம் இடம் வலுவாக அல்லது சுப கிரகத்தின் பார்வை பெறுவது அவசியம். அந்த வகையில் தற்போது மேஷ ராசிக்கு குரு வருவதால், குருவின் 7 ஆம் பார்வை நேரடியாக திருமண யோகம் தரக்கூடிய களத்திர ஸ்தானம் மீது விழுகிறது. அதோடு குருவின் 9 ஆம் பார்வை கால புருஷ தத்துவத்தின் பாக்கிய ஸ்தானம் மீது விழுவதால் திருமண முயற்சியில் உள்ள அனைத்து ராசியினருக்கும் சாதக பலன் உண்டாகும். அப்படி, அதிர்ஷ்டத்தை பெற உள்ள ராசிகள் யார் என இங்கே பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 38

    குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு?... இந்த ராசிக்காரர்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போடப்போறாங்க!

    மேஷம் : மேஷ ராசியினருக்கு இந்த ஆண்டு திருமண யோகம் உண்டாகக்கூடிய ஆண்டாக உள்ளது. ஏனெனில், மற்ற ராசிகளுக்கும் குருவின் ஆதரவு கிடைக்கும் என்ற நிலையில், மேஷ ராசிக்கு, ராசியிலேயே குரு அமர்வதால் உங்களுக்கு குருவின் பலம் அதிகமாக கிடைக்கும். இதனால் நீங்கள் எடுக்கும் குறைந்த அளவிலான திருமண முயற்சி நல்ல வாழ்க்கைத் துணையைத் தேடித் தரும்.

    MORE
    GALLERIES

  • 48

    குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு?... இந்த ராசிக்காரர்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போடப்போறாங்க!

    சிம்மம் : குரு பகவான் சிம்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9 ஆம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப பாக்கியங்களை தரக்கூடியவராக குரு அமைய உள்ளார். அதனால் சிம்ம ராசி, சிம்ம லக்கினத்தைச் சேர்ந்தவர்களுக்கு குருவின் அருளால் நல்ல வாழ்க்கைத் துணை அமையப் போகின்றார். அதனால் திருமண முயற்சியை செய்வது நல்லது.

    MORE
    GALLERIES

  • 58

    குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு?... இந்த ராசிக்காரர்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போடப்போறாங்க!

    துலாம் : துலாம் ராசிக்கு திருமண யோகம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அடுத்த ஒரு ஆண்டு காலம் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானம் எனும் மனைவி, துணை ஸ்தானத்தில் குருவின் சஞ்சாரம் நடக்க உள்ளது. அதனால் இந்த ஆண்டு நீங்கள் திருமண முயற்சி மேற்கொண்டால் சிறப்பாக திருமணம் நடக்கும். அதோடு அன்பும், பண்பும், அறிவும் கொண்ட மிகவும் அற்புதமான துணை உங்களுக்கு கிடைப்பார்கள்.

    MORE
    GALLERIES

  • 68

    குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு?... இந்த ராசிக்காரர்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போடப்போறாங்க!

    விருச்சிகம் : விருச்சிக ராசிகாரர்களுக்கு இந்தாண்டு குருபகவானால் திருமண யோகம் இல்லை. அப்படிப்பட்ட நிலையில் திருமணம் செய்ய முயற்சிக்கும் விருச்சிக ராசி, லக்கினக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய காலம். உங்கள் ராசிக்கு சதுரு ஸ்தானத்தில் குரு இருப்பதால் உங்களுக்கு வரக்கூடிய துணை எதிரியாக மாற வாய்ப்புள்ளது.

    MORE
    GALLERIES

  • 78

    குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு?... இந்த ராசிக்காரர்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போடப்போறாங்க!

    தனுசு : தனுசு ராசிக்கு 5 ஆம் ஸ்தானமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு அமர்ந்துள்ளார். நம்முடைய முன் ஜென்ம புண்ணியங்கள் எல்லாம் இந்த ஸ்தானத்தில் கிடைக்கும். இங்கு குருவின் சஞ்சாரம் நடப்பதால் திருமணத்திற்கான யோகம் உங்களுக்கு உருவாகும். உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான நபர் உங்களுக்கு வாழ்க்கைத் துணையாக அமைய வாய்ப்புள்ளது.

    MORE
    GALLERIES

  • 88

    குரு பெயர்ச்சி கல்யாண யோகம் யாருக்கு?... இந்த ராசிக்காரர்கள் விரைவில் கல்யாண சாப்பாடு போடப்போறாங்க!

    மீன ராசி : மீன அதிபதி குரு ராசிக்கு 2 ஆம் வீடான குடும்பம், தன ஸ்தானத்தில் குரு மாறப்போகிறார். இதனால் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் மீன ராசி, மீன லக்கினத்தை சேர்ந்தவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். திருமண வயதில் இருப்பவர்கள் முயன்றால் நல்ல வரன் அமையும்.

    MORE
    GALLERIES