முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » மனைவிக்கு துரோகம் செய்தால் கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா?

மனைவிக்கு துரோகம் செய்தால் கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா?

மனிதர்களின் பாவ, புண்ணியங்களின் அடிப்படையில், இறந்ததும் அவர்களின் ஆன்மாவுக்குத் தண்டனையோ, வெகுமதியோ உண்டு. அதற்காகவே சொர்க்கம், நரகம் படைக்கப்பட்டுள்ளன என்பதும் பொதுவாக எல்லா மதங்களும் கூறும் கருத்து. சொர்க்க, நரகம் பற்றி மற்ற எல்லா நூல்களை விடவும் கருட புராணத்தில் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறப்பட்டிருக்கின்றன.

  • 17

    மனைவிக்கு துரோகம் செய்தால் கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா?

    நன்மை செய்தவர்களுக்குக் கிடைக்கும் சுகங்கள், தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய பாவங்களுக்கு ஏற்றபடி 28 வகையான நரகங்களில் கொடுக்கப்படும் கொடுமையான தண்டனைகள் பற்றியும் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. பாவம் செய்தவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைகள் பற்றி கருட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தண்டனைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க...

    MORE
    GALLERIES

  • 27

    மனைவிக்கு துரோகம் செய்தால் கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா?

    கருட புராணத்தில் பிறப்பு, இறப்பு, தானம், தர்மம், தவம், சடங்குகள், மனிதனின் கருமங்களுக்குரிய பலன்கள், நரகம், சொர்க்கம், மறுபிறப்பு போன்ற பல விஷயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. கருடபுராணத்தில் இறந்த பிறகு ஆன்மா தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவரது செயலின் அடிப்படையில் சொர்க்கமும் நரகமும் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், நரகத்தில் இருப்பதற்கான தண்டனை கர்மாவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. நரகத்தில் உள்ள ஒருவருக்கு என்ன தண்டனை என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க...

    MORE
    GALLERIES

  • 37

    மனைவிக்கு துரோகம் செய்தால் கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா?

    பாவிகளின் ஆன்மா மட்டுமே இறந்த பிறகு நரகத்திற்கு அனுப்பப்படுகிறது. இவற்றில் 84 லட்சம் இருப்பதாக கருட புராணம் கூறுகிறது, ஆனால் அவற்றில் 21 நரகங்கள் மட்டுமே முக்கியமானவை. நன்மை செய்தவர்களுக்குக் கிடைக்கும் சுகங்கள், தீமை செய்தவர்களுக்கு அவர்களுடைய பாவங்களுக்கு ஏற்றபடி 28 வகையான நரகங்களில் கொடுக்கப்படும் கொடுமையான தண்டனைகள் பற்றியும் விளக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது. பாவம் செய்தவர்களுக்குக் கிடைக்கும் தண்டனைகள் பற்றி கருட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில தண்டனை பற்றி பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 47

    மனைவிக்கு துரோகம் செய்தால் கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா?

    பொய்ச் சாட்சி சொல்லி நிரபராதிகளைத் துன்பத்துக்குள்ளாக்கும் மனிதர்களுக்கு உண்டான நரகம் `அவீசி’ இங்கு துர்நாற்றம் கொண்ட நீரில் ஆன்மாக்கள் அழுத்தப்பட்டுத் துன்புறுத்தப்படும்.

    MORE
    GALLERIES

  • 57

    மனைவிக்கு துரோகம் செய்தால் கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா?

    மக்களைக் கொன்று குவிக்கும், அப்பாவிகளின் உடைமைகளைப் பறித்துக்கொள்ளும் அநியாயக்காரர்களுக்கு சாரமேயாதனம் என்ற நரகம் நிச்சயம். இங்குள்ள கொடிய மிருகங்கள் ஆன்மாக்களை வாட்டி வதைக்கும்.

    MORE
    GALLERIES

  • 67

    மனைவிக்கு துரோகம் செய்தால் கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா?

    பிறரது மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடித்த பாவிகள் அடையுமிடம் தாமிரை நரகம். கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.

    MORE
    GALLERIES

  • 77

    மனைவிக்கு துரோகம் செய்தால் கருட புராணத்தில் என்ன தண்டனை தெரியுமா?

    மனைவியைத் துன்புறுத்தி வதைக்கும் நபர்களுக்கு லாலாபட்சம்’ நரகம். இங்கு ஆன்மாக்கள் தீக்கோலால் சுட்டுத் தண்டிக்கப்படும்.
    எந்தத் தொந்தரவும் செய்யாத மிருகங்களை வதைக்கும் நபர்களுக்கு பிராணிரோதம் நரகம். இங்கு ஆன்மாக்கள் கூரிய அம்புகளால் குத்தப்பட்டு துன்பத்தை அனுபவிக்கும்.

    MORE
    GALLERIES