முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » Gajalakshmi Rajayogam : கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிக்கு மே மாதம் பணவரவு கிடைக்கும்!

Gajalakshmi Rajayogam : கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிக்கு மே மாதம் பணவரவு கிடைக்கும்!

Gajalakshmi Yoga 2023 : ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றும். கிரக பயிற்சியின் போது, ஒரு கிரகம் மற்ற கிரகத்துடன் சேரும் போது பல யோகங்கள் உருவாகும். இதனால், சில ராசிகளுக்கு சுப பலன்கள் ஏற்படும்.

 • 15

  Gajalakshmi Rajayogam : கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிக்கு மே மாதம் பணவரவு கிடைக்கும்!

  இந்து ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே போல் சந்திர கிரகணமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5 ஆம் தேதி புத்த பூர்ணிமா அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், சந்திர கிரகணத்திற்கு முன் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. அதாவது, ராகுவும் குருவும் ஒரே ராசியில் சந்திக்கும் போது கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகும். இதனால், சில ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும். லட்சுமி தேவியின் பார்வை உங்கள் மீது விழுவதால், நிதி நிலைமை மேம்படும். அந்த ராசிக்காரர்கள் யார் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 25

  Gajalakshmi Rajayogam : கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிக்கு மே மாதம் பணவரவு கிடைக்கும்!

  மிதுனம்: சந்திரகிரகணத்திற்கு முன் உருவாகும் கஜலக்ஷ்மி ராஜயோகத்தால், மிதுன ராசிக்காரர்களுக்கு நிதி பிரச்சனை நீங்கும். அதிக லாபம் கிடைக்க உள்ளதால், உங்களின் பணக்கஷ்டம் நீங்கி வாழ்க்கை வளமாகும். அதே போல, தொழில் வாழ்க்கையில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வளர்ச்சி இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 35

  Gajalakshmi Rajayogam : கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிக்கு மே மாதம் பணவரவு கிடைக்கும்!

  கடக ராசி: கஜலக்ஷ்மி ராஜயோகத்தின் தாக்கத்தால் கடக ராசியினருக்கு மிகவும் சாதகமான காலமாக கூறப்படுகிறது. எதிர்பாராத வகையில் பெரிய அளவில் பணம் வந்து சேரும். தொழில்முனைவோருக்கு சிறந்த வாய்ப்புகள் உருவாகும். மேலும், அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக உள்ளது. உங்களின் நிதிநிலைமை மேம்படும். இதுவரை, நீங்கள் சந்தித்துவந்த உடல்நலக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.

  MORE
  GALLERIES

 • 45

  Gajalakshmi Rajayogam : கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிக்கு மே மாதம் பணவரவு கிடைக்கும்!

  கன்னி: கஜலக்ஷ்மி ராஜயோகத்தின் தாக்கத்தால் கன்னி ராசிகாரர்களுக்கு மிகவும் சாதகமான மாதம் இது. நீங்கள் நினைத்த அனைத்து காரியமும் வெற்றிகரமாக நடைபெறும். திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதார ரீதியாக பலமாக இருப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மரியாதை கூடும். வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கும்.

  MORE
  GALLERIES

 • 55

  Gajalakshmi Rajayogam : கஜலட்சுமி ராஜயோகத்தால் இந்த ராசிக்கு மே மாதம் பணவரவு கிடைக்கும்!

  மீனம் : மீன ராசியினருக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். புதிய தொழில் மற்றும் முதலீடு செய்வதில் நல்ல லாபம் கிடைக்கும்.

  MORE
  GALLERIES