சூரிய கிரகணம் என்பது என்ன? - சூரியன் பூமி இடையே சந்திரன் வருவதால் ஏற்படுவது தான் சூரிய கிரகணம். அதாவது, சூரிய ஒளியை சந்திரன் மறைப்பதால் இந்த சூரிய கிரகணம் உண்டாகிறது. இந்த முறை சூரியன், சந்திரன் ஒரே நேர்கோட்டில் வருவதால் சூரியனை முழுவதுமாக மறைக்க உள்ளதால் முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது.
சூரிய கிரகணம் 2023 எப்போது? - வானில் நடக்கும் ஒரு இயற்கையான நிகழ்வு தான் கிரகணங்கள். அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி ஏற்பட உள்ளது. வியாழன் அன்று காலை 7.04 மணி முதல் மதியம் 12.29 வரை ஏற்பட உள்ளது. காலை 9.46 மணிக்கு சூரிய கிரகணத்தின் உச்ச நிலையாக முழு சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது.
எந்தெந்த இடங்களில் பார்க்க முடியும் ? - கம்போடியா, சீனா, அமெரிக்கா, மைக்ரோனேஷியா, மலேசியா, பிஜி, ஜப்பான், சமோவா, சாலமன் தீவுகள், புருனே, சிங்கப்பூர், தாய்லாந்து, அண்டார்டிகா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வியட்நாம், தைவான், பப்புவா நியூ கினியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தென்னிந்திய பெருங்கடல் மற்றும் தெற்கு பசிபிக் பகுதியில் முழு சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.