‘கல்லடி பட்டாலும் படலாம்... கண் அடி மட்டும் படக்கூடாது’ என வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி கேட்டிருக்கிறீர்களா?. இதுவெறும் மூட நம்பிக்கை கிடையாது. பெரியவர்கள் குறிப்பிடும் ‘கண் திருஷ்டி’ என்பது ஒருவருடைய எதிர்மறையான எண்ணங்களை குறிக்கிறது. மனிதனின் வாழ்க்கை முறை என்ன தான் மாறினாலும், அவர்களுக்குள் பொறாமை என்ற குணம் முற்றிலும் மாறியிருக்க வாய்ப்பில்லை. நமது அன்றாட வாழ்க்கையில் பல பொறாமை குணம் கொண்ட நபர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அந்த தருணத்தில் எல்லாம் நமது உள்ளுணர்வு ஏதோ சரியில்லை என நம்மை எச்சரிப்பதை உணரலாம்.
ஆனால் சில சமயங்களில் நாம் பொறாமை குணம் கொண்டவர்களை கண்டுபிடித்தே விட்டாலும், நம்மைப் போன்ற சமூக அமைப்பில், அவர்களுடன் உறவுகளை துண்டிப்பது கடினம். ஏன் அவர் நமது நண்பர்களாகவோ, உறவினராகவோ கூட இருக்கலாம். யாரையும் தவிர்க்காமல் பொறாமை போன்ற எதிர்மறையான விஷயங்களில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள சில எளிமையான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. வீட்டின் மெயின் நுழைவாயில்: நல்லதோ, கெட்டதோ நம் வீட்டிற்குள் நுழைய முதலில் கடந்து வருவது நம் வீட்டு வாசலாக தான் இருக்கும். எனவே வீட்டின் பிரதான நுழைவாயிலை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். கண் திருஷ்டியை தடுக்க கூடிய சின்னங்கள் மற்றும் படங்களை மெயின் நுழைவாயில் முன்பு மாட்டிவைக்கலாம். இவை பிறரது எதிர்மறை எண்ணங்களை விரட்ட உதவும். கதவில் தலைகீழான U வடிவ குதிரை காலணியை பொறுத்துவது, எதிர்மறையான விளைவுகளை வீட்டு வாசலோடு விரட்ட உதவுகிறது.
2. கால் மிதியில் கவனம்: வீட்டிற்குள் நுழைபவர்கள் எதிர்மறையான எண்ணங்களுடன் வராமல் இருக்க, கதவை தாண்டி கீழே போடப்பட்டிருக்கும் டோர் மேட்களில் கவனம் செலுத்துங்கள். உப்பு எதிர்மறை எண்ணங்களை ஈர்க்க கூடியதாக கருத்தப்படுகிறது. எனவே கலப்படமற்ற பாறை உப்பு அல்லது கடல் உப்பை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி கதவிற்கு பின்புறம் வையுங்கள். இது உங்கள் வீட்டிற்குள் நுழைபவர்களின் கெட்ட ஆற்றல்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் உப்பை மாற்ற வேண்டியது அவசியம்.
4. படிகங்களால் கிடைக்கும் பலன்கள்: டூர்மலைன் என்பது ஒரு சக்திவாய்ந்த படிகமாகும், இது மக்களின் பொறாமை ஆற்றல்களைத் தடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. இடது கையில் வளையலாக அணியலாம். இடதுபுறம் நமது உடலின் பெறும் பக்கமாகக் கருதப்படுகிறது, எனவே இந்த படிகத்தை உங்கள் இடது மணிக்கட்டில் அணிவது ஒரு சக்திவாய்ந்த பாதுகாப்பு தாயத்து ஆகும்.