நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவு வரும். அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டவையாகவும் இருக்கலாம். இந்த கனவு ஏன் எனக்கு வந்தது என நீங்கள் பலமுறை யோசித்திருப்பீர்கள். ஆனால், ஸ்வப்ன சாஸ்த்திரத்தின்படி நாம் காணும் ஒவ்வொரு கனவுக்கும் ஒரு அர்த்தம் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, நமது நிஜ வாழ்க்கையில் நிகழும் சில சம்பவங்களின் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு காடு குறித்த கனவு வந்தால் என்ன அர்த்தம் என இங்கே காணலாம்.
மரக்கன்றுகள் நிறைந்த பசுமையான காடுகளை உங்கள் கனவில் கண்டால், அது நல்ல அறிகுறியாகும். இது உங்கள் வாழ்க்கையின் பசுமையை குறிப்பிடுகிறது. உங்கள் நிஜ வாழ்க்கையில் இருந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். நீங்கள் முன்னேறுவதற்கான புதிய வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். அதுமட்டும் அல்ல, உங்கள் நிதி நிலைமை விரைவில் மேம்படும் என்பதையும் குறிக்கிறது.
உங்கள் கனவில் பசுமையான அடர்ந்த காடு வந்தால், அது நல்ல அறிகுறியாகும். அதுமட்டும் அல்ல, விரைவில் நீங்கள் உங்கள் எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபடப்போகிறீர்கள் என அர்த்தம். அதே நேரத்தில் மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கை கதவை தட்டும். உங்கள் குடும்பம் செழிப்பதற்கான அறிகுறியாகும். தொழிலில் பதவி உயர்வு, உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.
காட்டில் தனிமையாக சிக்கிக்கொள்வதை போல கனவு கண்டாலோ அல்லது காட்டு விலங்குகள் உங்களைத் தாக்குவதை போல கனவு கண்டாலோ அது அசுப அறிகுறிகளாக கருதப்படுகிறது. உங்களின் நிஜ வாழ்க்கையில், பெரிய சிக்கலில் சிக்குவதற்கான அறிகுறியாகும். உங்கள் பெற்றோருடன் தொடர்புடைய சோகமான செய்திகளை நீங்கள் கேட்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.