மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கனவு வருவது இயல்பு. நமது கனவுக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. அனைவருக்கும் ஒரே மாதிரியான கனவு வருவதில்லை. ஒவ்வொரு கனவுக்கு ஒவ்வொரு அர்த்தம் உள்ளது. நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாத காரியங்களை கூட கனவில் நம்மால் செய்ய முடியும். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்தது கனவு. நமக்கு வரும் கனவுக்கும் நமது எதிர்காலத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கனவு சாஸ்திரம் கூறுகிறது. அப்படி, உங்கள் கனவில் சாப்பிடுவது போல கனவு வந்தால் என்ன அர்த்தம் என்று எப்போதாவது யோசித்தது உண்டா?. உங்கள் கனவில் நீங்கள் சாப்பிடுவது போல கண்டால் அதற்கான அர்த்தம் என்ன என்பதை நாங்கள் கூறுகிறோம்.
சாப்பிடுவதை போல கனவு வந்தால் : கனவு அறிவியலின் படி, உங்கள் கனவில் நீங்கள் உணவு உண்பதை கண்டால், அது நல்ல அறிகுறியாக கருதப்படுகிறது. வரும் காலத்தில் உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என்பதை இது குறிக்கிறது. அதே போல ஏதாவது நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் விரைவாக குணமாகப்போகிறீர்கள் என அர்த்தம். உங்கள் வாழ்க்கை நிலை சிறப்பான உயரப்போகிறது என்பதை அடித்து கூறலாம்.
சமையல் செய்வது போல கனவு : உங்களுக்கு உணவு சமைப்பதை போல கனவு வந்தால், அது நல்ல அறிகுறியாகும். நீண்ட நாட்களாக முடியாமல் இழுத்துக்கொண்டே இருந்த வேலை கூடிய விரைவில் முடியப்போகிறது என்பதை இது குறிக்கிறது. நிஜ வாழ்க்கையில் உங்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். அதுவே, உங்கள் கனவில் நீங்கள் மற்றவர்களுக்காக உணவு சமைத்துக்கொண்டிருந்தால், நீங்கள் மற்றவர்களைப் பற்றியும் உங்களைப் பற்றியும் சிந்திக்கிறீர்கள் என பொருள். மற்றவர்களின் தேவையையும் நீங்கள் பூர்த்தி செய்ய முயற்சிக்கிறீர்கள் என்று அர்த்தம்.
மற்றவர் உணவு உண்பதை காண்பது : உங்கள் கனவில் மற்றவர்கள் உணவு உண்பதை நீங்கள் கண்டால், அது நல்ல அறிகுறியாகும். வரும் காலங்களில் குடும்பத்தாரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரப்போகிறது என அர்த்தம். இது உங்கள் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தும்.
கனவில் உணவு தானம் : உங்கள் கனவில் ஒரு ஏழை அல்லது முதியவர்களுக்கு உணவை தானம் செய்கிறீர்கள் என்றால், இது உங்களுக்கு ஒரு முக்கியமான தகவலை கூறுகிறது என்று அர்த்தம். அதாவது, நிஜ வாழ்க்கையில் நீங்கள் ஏழை மக்களுக்கு பொருட்களை தானம் செய்ய வேண்டும் என்று அர்த்தம். அதே நேரத்தில், உங்கள் முன்னோர்களுக்கும் நீங்கள் உணவு படைக்க வேண்டும். அந்த வகையில், முன்னோர்களின் பெயரில் ஏழை எளியோருக்கு உணவளிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மற்றவர்களிடம் உணவு கேட்கிறது : நீங்கள் உங்கள் கனவில் மற்றவர்களிடம் உணவைக் கேட்டால், அது உங்கள் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளின் குறிகாட்டியாகும். உங்களுக்கு சில ஆசைகள் இருக்கிறது, அதை நீங்கள் விரும்பினாலும் நிறைவேற்ற முடியாது. நீங்கள் கேட்ட உணவை அவர்கள் உங்களுக்கு வழங்கினால், உங்கள் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது என்பதைக் காட்டுகிறது. நீங்கள் கனவில் ஆப்பிள் சாப்பிட்டால், விரைவில் நீங்கள் வணிகத்தில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள் என்று அர்த்தம்.
விருந்தினர்களுடன் சாப்பிட்டால் : உங்கள் கனவில் விருந்தினர்களுடன் சாப்பிடுவதை நீங்கள் கண்டால், அது மங்களகரமானதாக கருதப்படாது. செய்கிற வேலையைச் சரியாகச் செய்வதுடன் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம். மறுபுறம், உங்கள் கனவில் நீங்கள் ரொட்டி சாப்பிடுவதைக் கண்டால், உங்கள் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது என்று அர்த்தம்.