இயல்பாகவே கனவுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனென்றால், மனதில் என்ன நினைக்கிறோமோ அதுதான் கனவாக வரும் என நம்மில் பலர் நம்புகின்றார்கள். கனவு நம்மை வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அதற்கு எந்த அர்த்தமும் இல்லை என நம்மில் பலர் நம்புவோம். ஆனால், கனவுக்கும் நமது நிஜ வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது.
ஒரு காதல் உறவில் இருந்து விலகுவது ஒன்றும் அவ்வளவு பெரிய குற்றம் அல்ல. இருவருக்கும் சில விஷயங்கள் ஒத்துப்போகாத போது, அவர்கள் பிரிகிறார்கள். ஒவ்வொரு நாளும் எவ்வளவு காதல் உடைகிறது, எவ்வளவு காதல் புதிதாக உருவாக்கப்படுகிறது. என்னதான் புதிய உறவுக்குள் சென்றாலும் நம்மில் பலர் நமது முன்னாள் காதலை கண்டிப்பாக நினைப்போம். அந்தவகையில், உங்களின் முன்னாள் காதலன் அல்லது காதலி உங்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?. இதன் அர்த்தம் தெரிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்.
உங்களின் முன்னாள் காதலன் அல்லது காதலி ஒரு கூட்டத்திற்கு மத்தியில் நிற்பதை போல கனவு கண்டால், நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தற்போது உள்ள உறவில் நீங்கள் இன்னும் உங்கள் பழைய உறவை தேடுகிறீர்கள் என அர்த்தம்.இந்த சூழ்நிலையில், புதிய உறவை பற்றி நீங்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். இதை தொடரலாமா? அல்லது முறித்துக்கொள்ளலாமா என.
சில சமயங்களில் புதிய உறவில் இருக்கும் போது, நமது முன்னாள் காதலன் மற்றும் காதலியுடன் உடலுறவில் ஈடுபடுவது போல நாம் கனவு கண்டிருப்போம். இதற்கான அர்த்தம் என்னவென்றால், தற்போதைய துணையுடன் உள்ள நெருக்கம் அவ்வளவாக இல்லை என்பதை குறிக்கிறது. எல்லா விஷயங்களிலும் அவரை இவர் பூர்த்தி செய்யவில்லை என அர்த்தம். அதுமட்டும் அல்ல, உங்கள் முன்னாள் காதலன்/காதலியை இன்னும் நேசிக்கிறீர்கள் என அர்த்தம்.
உங்கள் முன்னாள் காதலி/காதலனுக்கு பரிசு கொடுப்பது போல நீங்கள் கனவு கண்டால், உங்கள் மனதில் இன்னும் முந்தைய உறவைச் சுமக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். முந்தைய உறவு மற்றும் முன்னாள் எண்ணங்களிலிருந்து உங்களால் எப்போதும் வெளியேற முடியாது. எனவே, புதிய உறவில் இருந்தால் சற்று கவனம் தேவை.
நீங்கள் உங்கள் கனவில் யாரையாவது உதட்டோடு, உதடு வைத்து முத்தம் கொடுப்பது போல கனவு கண்டால், நிஜ வாழ்க்கையில் நீங்கள் உங்கள் உணர்வுகளை இன்னும் நேர்மையாக வெளிப்படுத்த வேண்டும். நிஜ வாழ்க்கையில் உங்கள் உறவுகளுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் காட்ட வேண்டும். உங்கள் துணை உங்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் போகலாம், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் உங்கள் மனக்குறையை அவர்களுக்கு தெரியப்படுத்துவது நல்லது.