பல சமயங்களில் இரவு பகலாக உழைத்தாலும், உழைப்புக்கு ஏற்ற சரியான பலன் நமக்கு கிடைப்பதில்லை. அத்தகைய சூழ்நிலையில், நாம் ஏமாற்றம் மற்றும் அவநம்பிக்கை அடைவோம். அதே போல, நம்மில் பலர் கைநிறைய சம்பாதித்தாலும், அது கையில் நீக்காமல் செலவாகிக்கொண்டே இருக்கும். இதற்கு ஜோதிட சாஸ்திரத்தில், பல பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை முறையாக செய்தால், லட்சுமி தேவியின் அருள் நிலைத்திருக்கும். அத்துடன் நீங்கள் சம்பாதித்த பணமும் உங்களிடம் நிலையாக இருக்கும். அந்த பரிகாரங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
பண நெருக்கடியில் இருந்து விடுபட : பணத் தட்டுப்பாட்டிலிருந்து விடுபட வேண்டுமானால், தேங்காய்த் துருவல், தாமரைப்பூ, தயிர், வெள்ளைத் துணி, வெள்ளை இனிப்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவிக்கு அதை அர்ப்பணித்து, பின்னர் இந்த தேங்காயை சிவப்பு நிற துணியில் கட்டி யாரும் பார்க்காத இடத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் பணம் தொடர்பான அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் தீரும்.