இந்து மாதத்தில் வாஸ்து மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஏனென்றால், வாஸ்து குடும்பத்தின் மகிழ்ச்சி, நிதி மேம்பாடு மற்றும் அமைதிக்கு முக்கிய காரணமாக உள்ளது. வாஸ்து தோஷத்தை போக்கும் பல மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. அவை, மிகவும் புனிதமாக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று, துளசி செடி. ஜோதிடத்தில் துளசி செடிக்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவு, அறிவியல் ரீதியாகவும் அதிக நன்மைகளை கொண்டது.
இந்து மதத்தில், ஒவ்வொரு வீட்டிலும் தினமும் காலையில் துளசி செடிக்கு விளக்கேற்றி பூஜை செய்யப்படுகிறது. இது தவிர, துளசி இலைகள் பல வகையான நோய்களுக்கும் நல்ல மருந்து. துளசி செடியில் மஞ்சரி வந்தால், அது எவ்வளவு நன்மை பயக்கும் எது நம்மில் சிலருக்கே தெரியும். மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ துளசி செடிக்கு செய்யக்கூடிய சில பரிகாரங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
ஜோதிட சாஸ்திரப்படி துளசி செடியில் மஞ்சரி (பூ) சேர்வது மங்களகரமானது. துளசி விஷ்ணுவுக்கு மிகவும் பிடித்தமான செடி என்று மத நம்பிக்கைகள் கூறுகின்றனர். அதனால், தான் துளசி குறிப்பாக விஷ்ணுவின் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, துளசி இலைகள் மற்றும் துளசி மஞ்சரியை விஷ்ணுவுக்கு அர்ப்பணித்தால், நீண்ட நாட்களாக உங்களுக்கு வராமல் இருந்த பணம் கைக்கு கிடைக்கும். மேலும், உங்களின் வருமானம் பெருகும்.
இன்றைய காலக்கட்டத்தில், ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழவும், பணம் சம்பாதிக்கவும் விரும்புகிறார்கள். வாழ்க்கையில் முன்னேறவோ அல்லது பணம் சம்பாதிக்கவோ நினைத்தால், துளசி மஞ்சரியை சிவப்பு நிற துணியில் கட்டி உங்கள் வீட்டின் பெட்டகத்தில் வைக்கவும். இவ்வாறு செய்வதால் லட்சுமி தேவியின் அருள் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.