இந்து சாஸ்திரங்கள் படி, அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். கஷ்டத்தில் இருக்கும், ஏழை மக்களுக்கு அட்சய திருதியை அன்று உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள், தானம் செய்யலாம். தானம் செய்வதால், நமக்கு மட்டுமல்ல, நம் வருங்கால சந்ததியினருக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அட்சய திரிதியை எப்போது? : 2023 ஆம் ஆண்டு அட்சய திரிதியை ஏப்ரல் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆனால், ஏப்ரல் 22 ஆம் தேதி சனிக்கிழமை காலை 09.18 மணிக்கே திரிதியை திதி துவங்கி விடும். ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 09.27 வரை மட்டுமே திரிதியை திதி உள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதியே சூரிய உதய காலத்தில் திரிதியை திதி உள்ளதால் அன்றைய தினமே அட்சய திரிதியை நாளாக அனுசரிக்கப்படுகிறது. தங்கம் வாங்குவதற்கான நல்ல நேரமாக ஏப்ரல் 22 ஆம் காலை 07.49 முதல் ஏப்ரல் 23 ஆம் தேதி காலை 07.47 வரை சொல்லப்படுகிறது.
அட்சய திருதியை நாளின் சிறப்பே இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றி பெரும் என்பதுதான் என்கிறது ஜோதிடம். செல்வத்தை அள்ளித்தரும் இந்த நன்னாளில் தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு கிடைக்கும். அட்சய திருதியை அன்று தானம் கொடுக்க வேண்டிய விஷயங்கள் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது எனப் பார்க்கலாம்.