அவசர தேவை என்றால் நாம் முதலில் நாடுவது அக்கம் பக்கத்து வீட்டு காரர்களை தான். ஏனென்றால், அவர்கள் நமக்கு உதவுவதும்… நாம் அவர்களுக்கு உதவுவதும் வழக்கமான விஷயம். அது பணமாக இருந்தாலும் சரி… பொருட்களாக இருந்தாலும் சரி… மாதம் கடைசியானால் நம்மிடம் இல்லாத பொருட்களை நாம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் கேட்பதுண்டு அல்லது அவர்கள் நம்மிடம் கேட்பதுண்டு. அப்படி கேக்கும் போது நாமும் யோசிக்காமல் அவர்கள் கேட்கும் பொருளை நாம் கொடுத்து விடுவோம். ஆனால், அது வாஸ்து சாஸ்த்திரத்தின் படி தவறு என உங்களுக்கு தெரியுமா?.
இதனால், உங்கள் மகிழ்ச்சியும், அமைதியும் வீட்டை விட்டுப் போய்விடும் என கூறினால் நம்ப முடிகிறதா?. ஆமாம்… அது உண்மைதான். அதற்காக அவர்களுக்கு உதவ வேண்டாம் என கூறவில்லை. சில பொருட்களை சூர்யன் அஸ்தமனத்திற்கு பின் பகிர வேண்டாம் என கூறுகிறோம். வாஸ்து சாஸ்த்திரம், உங்கள் வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நேரடியாக தொடர்புடையது. உங்கள் வீட்டின் நிம்மதியும் மகிழ்ச்சியும், நீங்கள் வீட்டினுள் வைக்கும் பொருட்கள், நடவு செய்யும் மரங்கள் மற்றும் செடிகள், நாம் மற்றவர்களுக்கு தானமாக வழங்கும் பொருட்கள் என அனைத்து விஷயங்களுடனும் தொடர்புடையது. அந்த வகையில், நாம் ஜோதிட சாஸ்திரப்படி அண்டைவீட்டாருக்கு கடனாக கொடுக்கக் கூடாத சில விஷயங்கள் பற்றி காணப்போகிறோம்.
அரிசி : தானத்தில் சிறந்தது அன்னம் வழங்குவது என நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஒருவரின் பசியை ஆற்றும் அன்னத்தை நாம் தானம் செய்வதன் மூலம் நமக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும். அதுமட்டும் அல்ல, தானத்தை பற்றி புராணங்களும், இதிகாசங்களும் கூறுகின்றனர். ஆனால், வீட்டில் வைத்திருக்கும் அரிசியை அக்கம் பக்கத்தினர் கேட்டால் கொடுக்கக்கூடாது என வாஸ்து கூறுகிறது. ஜோதிடம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் படி, அரிசி சுக்கிர கிரகத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது. எனவே, உங்கள் அண்டை வீட்டாருக்கு நீங்கள் அரிசியை கடனாக கொடுத்தால் உங்களுக்கு சுக்ர தோஷம் கிடைக்கும். இந்த சுக்ர தோஷம் காரணமாக உங்க வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். எதிர்மறை ஆற்றல் அதிகரித்து வீட்டில் உள்ளவர்களுக்கு மனமும் உடலும் பாதிக்கப்படும்.
கடுகு அல்லது எள் எண்ணெய் : கடுகு மற்றும் எள் சனி பகவானுடன் தொடர்புடையது. அத்தகைய சூழ்நிலையில், அண்டை வீட்டாருக்கு ஒருபோதும் கடுகு எண்ணெயை கடனாக கொடுக்க முயற்சிக்காதீர்கள். சனிக்கிழமைகளில் கடுகு எண்ணெயை கோயிலில் வழங்குவது நல்லது. ஆனால், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கொடுப்பது அசுப பலனை ஏற்படுத்தும். கடுகு அல்லது எள் எண்ணெய்யை தானம் செய்வது அவர்கள் வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை நாம் விலைக்கு வாங்குவது போன்றது.
பால் அல்லது தயிர் : வாஸ்து மற்றும் ஜோதிடத்தின் படி, பால் சந்திர கிரகத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. நீங்கள் ஒருவருக்கு பால் அல்லது பாலால் செய்யப்பட்ட ஏதாவது ஒன்றை கடன் கொடுத்தால், அது உங்களுக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும். சந்திரன் என்றால் நமக்கு நன்மை செய்ய கூடியவர். அந்தவகையில், நீங்கள் பால் அல்லது பால் சார்ந்த பொருட்களை நாம் பக்கத்து வீட்டாருக்கு பகிரும் போது, அது உங்கள் வீட்டில் இருக்கும் நல்லதை பக்கத்து வீட்டிற்கு கொடுப்பதாக கருதப்படுகிறது. எனவே, ஒரு போதும் பால் அல்லது பாலில் செய்யப்பட்ட பொருட்களை சூரிய அஸ்தமத்திற்கு பின் மற்றவர்களுக்கு பகிர்வதை தவிர்க்கவும்.
மஞ்சள் : சமையல் அறையில் எப்போதும் காணப்படும் பொருட்களில் மஞ்சளும் ஒன்று. ஏனென்றால், மஞ்சள் இல்லாமல் எந்த ஒரு சமையலும் முழுமையடையாது. மஞ்சள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். மஞ்சள் குரு பிரகஸ்பதி கடவுளுடன் தொடர்புடையது. அதாவது, ஜோதிட சாஸ்திரத்தின் படி, மஞ்சள் வியாழனுடன் (குரு பகவான்) தொடர்புடையது. எனவே, மஞ்சளை தானம் செய்தாலோ அல்லது கடன் கொடுத்தாலோ குரு தோஷம் உண்டாகும். வியாழன் சிறந்த பலன் தரும் கிரகம். எனவே, சமையலறையில் வைக்கப்படும் மஞ்சளை அண்டை வீட்டாரிடம் கடனாகக் கொடுக்கக் கூடாது.
பூண்டு : கேது கிரகம் பூண்டு வெங்காயத்துடன் தொடர்புடையது. உங்கள் அண்டை வீட்டாருக்கு பூண்டு வெங்காயம் கடன் கொடுத்தால், உங்கள் வீட்டின் செழிப்பு நின்றுவிடும். அத்துடன், பண பிரச்சனைகள் ஏற்படும். அத்துடன் உங்கள் வீட்டில் உள்ள மகிழ்ச்சியையும் இது சீர்குலைக்கும் எனவும் கூறப்படுகிறது. எனவே, சமையலறையில் வைத்துள்ள பூண்டு வெங்காயத்தை அண்டை வீட்டாரிடம் கடனாகக் கொடுகாதீர்கள்.
உப்பு : நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் என்றால், உப்பை எப்போது மற்றவர்களுக்கு கடன் கொடுக்க கூடாது என்பது. உப்பு கொட்டுவது மற்றும் கடன் கொடுப்பது என இவை இரண்டும் அசுபமாக கருதப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு கடனாக கொடுத்தால், நீங்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். அத்துடன், பல இன்னல்களும் குடும்பத்திற்கு ஏற்படும் என கூறப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின்படி, மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை மற்றவர்களுக்கு, கடன் கொடுத்தால் பெரும் தீங்கு ஏற்படும். ஏனென்றால், சமையலறையில் உள்ள சில பொருட்கள் ஒருவரின் தலைவிதியுடன் தொடர்புடையவை. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் சமையலறையில் இருந்து அண்டை வீட்டாருக்கு இவற்றை ஒருபோதும் கொடுக்கக்கூடாது என கூறப்படுகிறது. இதனால், லட்சுமி தேவி கோபமடைந்து, வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் குறையக்கூடும்.