முகப்பு » புகைப்பட செய்தி » வாஸ்து டிப்ஸ் : வீட்டில் விளக்கு வைக்கும் போது நீங்களும் இந்த தவறை செய்யுறீங்களா?

வாஸ்து டிப்ஸ் : வீட்டில் விளக்கு வைக்கும் போது நீங்களும் இந்த தவறை செய்யுறீங்களா?

Vastu Tips: வீட்டில் தீபம் ஏற்றும் போது நாம் தெரிந்தே செய்யும் சில தவறுகள், வாழ்க்கையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?. வீட்டில் இறைவனுக்கு தீபம் ஏற்றும் போது அடிக்கடி சில தவறுகளை நாம் செய்வோம். அந்த தவறு நமக்கு பெரிய அழிவை ஏற்படுத்தும் என ஜோதிடம் கூறப்படுகிறது. நாம் தீபம் ஏற்றும் போது செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்.

  • 17

    வாஸ்து டிப்ஸ் : வீட்டில் விளக்கு வைக்கும் போது நீங்களும் இந்த தவறை செய்யுறீங்களா?

    Vastu Tips For worship: இந்து மதத்தில் இறைவழிபாடு மிகவும் முக்கியமான ஒன்று. தொடர்ந்து இறைவழிபாடு செய்வதன் மூலம் தெய்வங்களின் அருள் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். ஆனால் கடவுள் வழிபாடு குறித்து பல விதிகள் வாஸ்து சாஸ்த்திரத்தில் கூறப்படுகிறது. நாம் இறை வழிபாட்டின் போது செய்யப்படும் சிறிய தவறு நம்மை பெரிய பாதிப்புக்கு உள்ளாக்கும் என கூறப்படுகிறது. இறைவழிபாட்டில் தீபம் வைப்பது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் பூஜைக்காக ஒரு தீபத்தை ஏற்றும் போது, தேவர்களும், தெய்வங்களும் மகிழ்ச்சி அடைவதாக கூறப்படுகிறது. எனவே, தீபம் ஏற்றும் போது நாம் எந்த தவறையும் செய்யக்கூடாது. விளக்கு ஏற்றும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

    MORE
    GALLERIES

  • 27

    வாஸ்து டிப்ஸ் : வீட்டில் விளக்கு வைக்கும் போது நீங்களும் இந்த தவறை செய்யுறீங்களா?

    உடைந்த விளக்கை பயன்படுத்த வேண்டாம் : இந்து மத சாஸ்திரங்களின்படி, வழிபாட்டின் போது உடைந்த விளக்கை எப்போதும் ஏற்ற வேண்டாம். மத விஷயங்களில் உடைந்த விளக்குகள் அசுபமாகக் கருதப்படுகின்றன. உடைந்த விளக்குகளில் நாம் விளக்கு ஏற்றினால், அது நமக்கு குடும்பத்தில் உள்ள மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கெடுப்பதாக கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல, தெய்வத்தின் அருள் உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். நீட்டில் கஷ்டம் ஏற்படும். எனவே, மறந்தும் இந்த தவறை நாம் செய்ய வேண்டாம்.

    MORE
    GALLERIES

  • 37

    வாஸ்து டிப்ஸ் : வீட்டில் விளக்கு வைக்கும் போது நீங்களும் இந்த தவறை செய்யுறீங்களா?

    மண் விளக்கை பயன்படுத்தவும் : வழிபடும் போது சுத்தமான மற்றும் சரியான விளக்கை மட்டும் பயன்படுத்தவும். மண் விளக்கை ஏற்றினால், ஒருமுறை பயன்படுத்திய விளக்கை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். இது தவிர உலோக விளக்குகளை பயன்படுத்தினால் வழிபடும் முன் நன்கு சுத்தம் செய்த பிறகே பயன்படுத்தவும். அசுத்தமான விளக்கை பூஜைக்கு பயன்படுத்தினால், அது தீய பலன்களை கொடுக்கும். அதாவது, குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவதுடன், நிதி இழப்பு ஏற்படும்.

    MORE
    GALLERIES

  • 47

    வாஸ்து டிப்ஸ் : வீட்டில் விளக்கு வைக்கும் போது நீங்களும் இந்த தவறை செய்யுறீங்களா?

    விளக்கு வைக்க சரியான திசை எது? : வழிபாட்டின் போது விளக்கு ஏற்ற நாம் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றை பயன்படுத்துவோம். அப்படி நீங்கள் நெய் தீபம் ஏற்றினால் அதை இறைவனுக்கு இடது புறமும், எண்ணெய் தீபம் வலது புறமும் ஏற்றி வைத்தால் நல்ல பலனை கொடுக்கும். மறுபுறம், நீங்கள் நெய் தீபம் ஏற்றினால், வெள்ளை பருத்தியையும், எண்ணெய் விளக்கு ஏற்றினால், சிவப்பு நூல் திரியையும் பயன்படுத்தவும். நீங்கள் விளக்கு ஏற்றும் போதெல்லாம், தண்ணீர் பானைக்கு அருகில் நெய் விளக்கை வைக்கவும். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும். இதனுடன், உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    வாஸ்து டிப்ஸ் : வீட்டில் விளக்கு வைக்கும் போது நீங்களும் இந்த தவறை செய்யுறீங்களா?

    இந்த பொருட்களின் மீது விளக்கை வைக்கவும் : மாலையில் வீட்டின் பிரதான வாசலில் தரையில் விளக்கை வைப்பதற்குப் பதிலாக, அரிசி அல்லது பிற தானியங்களின் மேல் வைத்தால் நல்ல பலனை கொடுக்கும் என கூறப்படுகிறது. மேலும், விளக்கை ஏற்றிய உடனே அணைக்கக் கூடாது, காற்றில் இருந்து பாதுகாத்த பிறகு விளக்கை ஏற்ற வேண்டும். நீதியின் கடவுளான சனி மகராஜைப் பிரியப்படுத்த, ஒருவர் தனது சடேசாதி மற்றும் சனி தையா போன்ற கோபத்தைத் தவிர்க்க எள் விளக்கை ஏற்ற வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 67

    வாஸ்து டிப்ஸ் : வீட்டில் விளக்கு வைக்கும் போது நீங்களும் இந்த தவறை செய்யுறீங்களா?

    ஒரு விளக்கின் மூலம் மற்ற விளக்கை ஏற்ற கூடாது : மத சாஸ்திரங்களின்படி, ஒரு விளக்கில் இருந்து மற்றொரு விளக்கை ஏற்றக்கூடாது. எப்பொழுதும் தனித்தனியாக விளக்கை ஏற்றவும். இதனுடன், விளக்கு வைக்க சரியான திசை கிழக்கு என்பதை மனதில் வைக்கவும். நம்பிக்கையின்படி, மேற்கு திசையில் விளக்கை வைப்பது ஆடம்பரத்தை அதிகரிக்கிறது. அதே நேரத்தில் முன்னோர்களுக்காக தெற்கில் ஒரு தீபம் ஏற்றப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    வாஸ்து டிப்ஸ் : வீட்டில் விளக்கு வைக்கும் போது நீங்களும் இந்த தவறை செய்யுறீங்களா?

    விளக்கு ஏற்றும் நேரம் : விளக்கு ஏற்ற சரியான நேரம் காலை 5:00 மணி முதல் 10:00 மணி வரை. மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை தீபம் ஏற்றினால் நல்ல பலனை கொடுக்கும். கடவுளுக்கு தீபம் ஏற்றும்போது தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை செய்து விடுகிறோம். அந்தத் தவறுகளின் பலனாக வழிபாட்டின் பலனை முழுமையாகப் பெற முடியாது. மேற்கூறிய விதிகளின்படி தெய்வத்திற்கு தீபம் ஏற்றி வழிபட்ட பலன் கிடைக்கும். எனவே, பூஜையின் போது எல்லா விஷயத்தையும் கவனமாக கடைபிடிக்கவும்.

    MORE
    GALLERIES