நாட்டில் பல கோவில்களை சுற்றி பல நம்பிக்கைகள் உள்ளன. சில கோவில்களில் பெண்களை அனுமதிப்பதில்லை என்று கேள்விப்பட்டிருப்போம், சில கோயில்களுக்கு ஆண்களை அனுமதிப்பதில்லை, சில கோயில்களில் ஆடை அணியாமல் செல்ல வேண்டும் என பல விசித்திரமான கோயில்கள் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால், குழந்தைகளுக்கு மட்டுமே அனுமதி உள்ள கோயில் பற்றி உங்களுக்கு தெரியுமா?.
இந்த கோவிலுக்கு பிற வயதுடையவர்கள் செல்வதில்லை. இது உத்தரகாண்ட் மாநிலத்தில் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்ட ஒரே கோவில் என்பதால் அதன் அடையாளமே இந்த கோவிலின் தனித்துவத்தை கூறுகிறது. தொலைதூரத்தில் வசிக்கும் மாணவர்கள் கூட படிப்பை முடிப்பதில் சிரமம் இருப்பதால், இங்கு வந்து வழிபடுவார்கள் என்று உள்ளூர் கிராமவாசிகள் கூறுகிறார்கள்.