மேஷம்:
இன்றைக்கு உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாளாக அமையும். வியாபார விஷயத்தில் நீங்கள் எந்தவொரு முடிவை எடுத்தாலும் நேர்மறையான அணுகுமுறையுடன் செயல்படுங்கள். தொழில் செய்வதற்கு உகந்த நேரம் இது. குழுவாக வேலை செய்வது உங்களுக்கு நல்ல லாபத்தைத் தரக்கூடும்.
பரிகாரம் - ராம நாமத்தை உச்சரிக்கவும்.
ரிஷபம்:
வியாபாரப் பணிகளில் வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். நீண்ட நாட்களாக எதிர்கொண்டிருந்த பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். இதனால் வணிக ரீதியானப் பாதிப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கும். புதிய முதலீடுகள் தொடர்பான விஷயங்களில் தகுந்த ஆலோசனைப் பெற்று முடிவெடுக்கவும்.
பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்
மிதுனம்:
இன்றைக்கு திட்டமிட்ட காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும். எந்த பெரிய முதலீட்டிலும் கை வைப்பதைத் தவிர்க்கவும். இன்றைக்கு நிதி நிலைமையைப் பற்றி ஆழமாக சிந்திப்பீர்கள். கல்வித் தொடர்பான பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தங்கம் அல்லது பங்குகளில் முதலீடு செய்து எதிர்காலத்திற்காக சிறிது பணத்தை சேமிக்கலாம்.
பரிகாரம் - மரத்திற்கு தண்ணீர் ஊற்றவும்
கடகம்:
இன்றைக்கு பணியில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் இணைந்துப் பணியாற்ற வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலையை அறிந்து கருத்துக்களை கூறவும். சுப காரியங்கள் தொடர்பான விரயங்கள் உண்டாகும். உங்களது ஒருங்கிணைப்பு மற்றும் குழுப்பணிகளில் சில நேரங்களில் சோதனை ஏற்படும். உங்களது தொடர்பு திறன்களில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். எதிர்பாராத லாபம் பெறக்கூடும்.
பரிகாரம் – பசுவினை வழிபடவும்
சிம்மம்:
இன்றைக்கு உயர் அதிகாரிகளின் ஒததுழைப்பால் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும். பெண்களுக்கு வீட்டு வேலைகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை எப்போதும் வலுவாக இருக்கும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். உங்களுக்கான வேலையை திறம்பட செய்தாலே நிதி ரீதியாக பிரச்சனையின்றி வாழலாம். இன்று உங்களுக்கு சிறந்த நாளாகவே அமையும்.
பரிகாரம்:- இரவில் தூங்கும் போது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, காலையில் வீட்டின் அருகில் உள்ள மரத்தின் வேரில் வைக்கவும்.
கன்னி :
இன்றைக்கு நிதி நிலைமையில் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படாது. எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் எப்போதும் கவனம் தேவை. வியாபாரத்தில் புகழ் உண்டாகும். பணியிடத்தில் மன அழுத்தம் ஏற்படும். கூட்டு வியாபாரப் பணிகளில் நிதானமாக செயல்படுவது நல்லது. உங்களது வாழ்க்கையில் பாராட்டுகள் நிறைந்த நாளாக இன்று அமையும்.
பரிகாரம்: நாய்க்கு ஒரு கிண்ணம் பால் கொடுக்கவும்.
துலாம்:
இன்றைக்கு எந்த தடைகள் இருந்தாலும் உங்களின் ,தன்னம்பிக்கை வாழ்க்கைக்கு உதவிக்கரமாக இருக்கும். சமூகப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு கற்பனைத்திறன் மேம்படும். வியாபாரத்தில் இருந்து வந்த போட்டிகள் குறையும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் பொருளாதார நெருக்கடி குறையும்.
பரிகாரம்:- பள்ளி, விடுதி அல்லது அனாதை இல்லத்திற்கு உங்களால் முடிந்த பொருள்களை தானம் செய்யவும். இது உங்களது வியாபாரத்திற்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக அமையும்.
விருச்சிகம்:
நிதி விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். இன்றைக்கு உங்களது குழந்தைகளால் மறைமுகமாக பணமோ அல்லது புகழோ வந்து சேரும். கல்வித்துறையில் வெற்றி பெறுவீர்கள். தாய் வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்துக்கொள்ளவும்.
பரிகாரம்: ஹனுமான் மந்திரத்தை உச்சரிக்கவும்.
தனுசு:
இன்றைக்கு தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருந்தால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வதந்திகளைக் கண்டுகொள்ளாதீர்கள். வேலை மற்றும் வியாபாரத்தில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைவீர்கள். சூழ்நிலைகளை அறிந்து அதற்கேற்றால் போல் உங்களது பணிகளை மேற்கொள்ளவும்.
பரிகாரம்: ஓம் நம சிவாய என்று 108 முறை உச்சரிக்கவும்.
மகரம்:
இன்றைக்கு கடன் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவதன் மூலம் வாழ்க்கையில் தெளிவும், புரிதலும் ஏற்படும். உங்களது திட்டங்களை முறையாக செயல்படுத்தினால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் சுப காரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் காணப்படும். மற்றவர்களால் உங்களுக்குத் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும்.
பரிகாரம்: ராமர் கோவிலில் அமர்ந்து ராம ரக்ஷா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.
கும்பம்:
வியாபார பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். இருந்தப் போதும் உங்கள் திட்டங்களை முறையாக மேற்கொண்டாலே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு முடியும். உடன்பிறந்தவர்களின் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எதிரிகள் உங்களுடன் சமாதானம் செய்துக்கொள்வார்கள். வாழ்க்கையில் சில சலுகைகளை நீங்கள் பெறுவீர்கள்.
பரிகாரம்: லக்ஷ்மி தேவியை வழிபடவும்.
மீனம்:
இன்று உங்களுக்குத் தைரியத்தைக் கொடுக்கும் நாளாக அமையும். உங்களது வேலையில் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவதோடு அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உங்களுக்குக் கிடைக்கப்பெறும். சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகள் மறையக்கூடும். எந்த வேலையிலும் அவசரம் வேண்டாம். கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். சுற்றுலா செல்வது உங்களுக்கு மன அமைதியைக் கொடுக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் சமர்பிக்கவும்.