ரிஷபம்:
உங்களை சுற்றி இருக்கும் அனைவரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் வசம் இருக்கும் திட்டங்களை சுமூகமாக முன்னெடுப்பீர்கள். பணியிடத்தில் உங்களின் வேலைத்திறன் அதிகரிக்கும். தடைகள் நீங்கும். எதிரிகள் குறைவார்கள், நம்பிக்கை முன்பை விட அதிகரிக்கும்.
பரிகாரம்: 108 முறை விநாயக மந்திரத்தை ஜபிக்கவும்
சிம்மம்:
இன்று உங்களது பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டிருந்த வேலைகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக முடியும். வியாபாரிகளுக்கு தொழில்லில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். இதனால் முன்னேற்றம் இருக்கும். இன்று நீங்கள் கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுங்கள்
துலாம்:
பணியிடத்தில் சக ஊழியர்களுடனான உறவுகள் மேம்படும். வியாபாரத்தில் முன்முயற்சி எடுப்பீர்கள். திடீர் பயணங்கள் இருக்கலாம். விடாமல் முயற்சி செய்யும் விஷயங்கள் வெற்றி கிடைக்கும் இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு தொழில் வளர்ச்சி விஷயங்கள் வேகமெடுக்கும்.
பரிகாரம்: ஹனுமான் சாலிசாவை 7 முறை பாராயணம் செய்யவும்
விருச்சிகம்:
பிடிவாதம், ஆணவம் மற்றும் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது உள்ளிட்ட செயல்களை இன்று தவிர்க்கவும். திட்டமிட்டு வேலை செய்தால் வியாபாரத்தில் நன்மை உண்டாகும். சூழலுக்கு ஏற்றவாறு அனுசரித்து செல்லுங்கள். உங்களது நிர்வாகத்திறமை இன்று வெளிப்படும்.
பரிகாரம்: கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் பறவைகளை விடுதலை செய்யவும்