ரிஷபம்:
பணி மற்றும் தொழில் ரீதியாக இன்றைய நாள் நல்லதாக அமைந்தாலும், சில சமயம் சில பிரச்சனைகள் வரும். ஆனாலும் அதனை புத்திசாலித்தனமாக அந்த பிரச்சனைகளை தீர்ப்பீர்கள். எதிர்காலத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் அலுவலக வேலைகளில் அதிக கவனம் செலுத்துதல் அவசியம்.
பரிகாரம் : விநாயகப் பெருமானை வழிபடுதல்
மிதுனம்:
உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன, எனவே உங்கள் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள். தொழில் செய்பவர்கள் தங்கள் வணிகத்தை அதிகரிக்க மக்கள் தொடர்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஊடகங்கள் மற்றும் தொலைபேசி மூலம் முக்கியமான ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்பு உண்டு.
பரிகாரம் : சூரியக் கடவுளுக்கு நீர் வழங்குதல்
கன்னி :
வேலை செய்பவர்களுக்கு வேலை மாறுவது தொடர்பான ஏதேனும் வாய்ப்பு கிடைத்தால், அதனை அவர்கள் உடனடியாக செய்வது நல்லது. தங்களிடம் பணிபுரியும் சக ஊழியர்கள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவதைப் போல உங்கள் ஆதிக்கமும் நிலைத்திருக்கும். சில காலமாக இருந்து வந்த ஏற்றத் தாழ்வுகளில் தேக்க நிலை ஏற்படும்.
பரிகாரம் : ஓடும் தண்ணீரில் தேங்காயை மிதக்க விடவும்
துலாம்:
நீங்கள் செய்யும் சிறிய தவறும் உயர் அதிகாரிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். பணியில் இருப்போர் உங்கள் வேலையின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
பரிகாரம்; வேலை செய்யும் இடத்தில் விநாயகப் பெருமானை வைத்து வழிபடவும்.
விருச்சிகம்:
வேலை செய்யும் இடத்தில் செயல்பாடுகள் சற்று மந்தமாக இருக்கும். எனவே பணம் வசூலிப்பதிலும், சந்தைப்படுத்தல் வேலைகளைச் செய்வதிலும் இன்றைய நாளை செலவிடுங்கள். இதனால் பொருளாதார நிலை வலுப்பெறும். வேலையில் இருப்பவர்கள் சில மாற்றங்கள் தொடர்பான தகவல்களைப் பெறலாம்.
பரிகாரம் : ஶ்ரீ எந்திரத்தை வழிபட்டு அதை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
மகரம்:
உங்கள் பெரும்பாலான வேலைகள் தொலைபேசியில் இருந்தே செய்யப்படும். இந்த நேரத்தில், பங்குகள் மற்றும் பங்குச் சந்தை தொடர்பான வணிகங்கள் லாபம் ஈட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேணுதல் நல்லது. தொழில் வியாபார நடவடிக்கைகள் சாதாரணமாக இருக்கும்.
பரிகாரம் : உங்கள் பணப்பையில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்திருங்கள்.
கும்பம்:
மார்க்கெட்டிங் தொடர்பான பணிகளை நீங்கள் கையாள்வது பொருத்தமாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலகக் கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். கூட்டாக சேர்ந்து செய்யும் வேலைகளில் லாபம் கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. அதனால் எந்த ஒரு வேலையிலும் துணையின் உதவியை பெறுங்கள், அது நன்மை தரும்.
பரிகாரம் : சிறுமிகளுக்கு இனிப்பு வழங்குதல்
மீனம்:
உத்தியோகத்தில் சிறுசிறு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை திறமையுடன் தீர்வு காண்பீர்கள். இன்றைய தினம் உங்கள் முழு கவனத்தையும் மார்க்கெட்டிங் வேலையை மேம்படுத்துவதில் செலுத்துங்கள். திட்டமிட்டு வேலை செய்வது உங்கள் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலுக்கு புல்லாங்குழல் வழங்குங்கள்