முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மார்ச் 15) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  மேஷம்:
  இன்று வாழ்க்கையின் புதிய பரிமாணம் கிடைக்கும் நாளாக அமையும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு, சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் பேசும் போது கவனம் வேண்டும். உங்களின் படைப்பாற்றல் மற்றும் உணர்திறன் காரணமாக, மகிழ்ச்சியான சூழலை அடைவீர்கள். உங்களது நம்பிக்கையை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். பல தரப்பட்ட மக்களின் அறிமுகமும், ஆதரவும் கிடைக்கும் நாள் இன்று.
  பரிகாரம்- ஏழைக்கு சிவப்பு பழத்தைத் தானம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 212

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  ரிஷபம்:
  இன்றைக்கு கவனமுடன் இருக்க வேண்டிய நாள் இன்று. இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துக்கொள்ளவும். அனைத்து வேலைகளையும் சரியாக செய்யக்கூடிய சூழல் ஏற்படும் என்பதால் அதிக மரியாதை உங்களுக்குக் கிடைக்கும். எதிர்பாராத உதவிகளின் மூலம் தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். சில பயணங்களின் மூலம் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.
  பரிகாரம் - ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 312

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  மிதுனம்:
  சுபம் நிறைந்த நாளாக அமையும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். பொழுது போக்கு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். ஆன்மீக நடைமுறைகள் உங்களது நாளை சிறப்பாக மாற்றும். எந்தவொரு மதப் பயணத்திலும் அல்லது நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உணர்வுகளை குடும்பத்தினர் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கும்
  பரிகாரம் - சிவபெருமானுக்கு நீரால் அரச்சனை செய்து வழிபடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 412

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  கடகம்:
  சில மதிப்புமிக்க பொருட்களை வாங்கலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் நிறைவேறும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் நாளாக இன்று அமையும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உருவாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும்.
  பரிகாரம் - அனுமனுக்கு ஆரத்தி எடுக்கவும்.

  MORE
  GALLERIES

 • 512

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  சிம்மம்:
  கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது. உங்கள் உரிமைகளைப் புரிந்துகொண்டு அவற்றைப் பயன்படுத்த வேண்டும். வீட்டின் பெரியவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும்.
  பரிகாரம் - அனுமன் மந்திரத்தை உச்சரிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 612

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  கன்னி:
  பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கணவன் மற்றும் மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். இன்று நீங்கள் வாழ்க்கையின் பொறுப்புகளை சிறப்பாக கையாள முடியும். பெரியவர் அல்லது ஆசிரியரின் ஆசியைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கும் இன்று சற்று சிரமமான நாளாக இருந்தாலும் உங்களது முயற்சிகள் வெற்றியை உண்டாக்கும்.
  பரிகாரம் - பசுவிற்கு ரொட்டி கொடுக்கவும்.

  MORE
  GALLERIES

 • 712

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  துலாம்:
  கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து, மனைவியுடன் உறவு மேம்படும். மனதில் புத்துணர்ச்சியான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உங்கள் உறவை குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வார்கள். இன்றைய நாள் இளைஞர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். தோற்றப்பொலிவு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.
  பரிகாரம் - ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 812

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  விருச்சிகம்:
  இன்று உங்கள் வேலையில் தடைகள் ஏற்படும். எல்லாம் குழப்பமும் தோன்றி மறையும். உறுதியுடன் செயல்பட்டால், வெற்றி உங்களைத் தேடி வரும். பணி தொடர்பான பயணங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
  பரிகாரம்- ஏழைக்கு சிவப்பு பழத்தைத் தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 912

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  தனுசு:
  பிள்ளைகளுடன் சிறு சிறு மன வருத்தங்கள் ஏற்படும் என்பதால் அன்னை சக்தியை வழிபடுவது உங்களுக்கு நல்ல பலன் தரும். பணி நிமிர்த்தமான விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது நல்லது. மனதில் தேவையில்லாத கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். உங்களின் மன உறுதி உங்களுக்கு வெற்றியைத் தரும். குடும்பம் மற்றும் வேலையில் அதிக கவனம் தேவை.
  பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 1012

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  மகரம்:
  பெரியவர், குருவின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டிய நாள் இன்று. அவர்களிடம் ஆலோசனைகளை பெற்று செயல்பட்டால் தடைகள் நீங்கும். உங்கள் வட்டத்திலிருந்து வெளியேறி புதிய நபர்களுடன் இணைய முயற்சிக்கும் போது வெற்றியைப் பெறுவீர்கள். புதிய நண்பர்களை உருவாக்க உங்களுக்கு அதிக தேவை உள்ளது. எப்போதும் நிதானமுடன் செயல்படவும்.
  பரிகாரம்- ஏழைக்கு சிவப்பு பழத்தைத் தானம் செய்யுங்கள்.

  MORE
  GALLERIES

 • 1112

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  கும்பம்:
  அதிர்ஷ்டமான நாள். எந்த வேலையை தொடங்கினாலும் அதில் வெற்றி நிச்சயம். இன்று உங்கள் ராசிக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்று சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். எனவே உங்களால் முடிந்ததை விட அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
  பரிகாரம் – ஆஞ்சநேயருக்கு வழிபாடு மேற்கொள்ளவும்.

  MORE
  GALLERIES

 • 1212

  புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 15, 2023) ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.!

  மீனம்:
  கவலைகள் விலகும் நாளாக இன்று அமையும். இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உங்களது பழைய படைப்புகளை மதிப்பாய்வு செய்ய வேண்டிய நாள் தான் இன்று. தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் மேம்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
  பரிகாரம்- சுந்தரகாண்டம் பாராயணம் செய்யவும்.

  MORE
  GALLERIES