ரிஷபம்:
தொழில் ரீதியாக இன்று சிறப்பான நாளாகும். சில சமயம் சில பிரச்சனைகள் வந்தாலும் புத்திசாலித்தனமாக அதற்கு தீர்வு காண்பீர்கள். எதிர்காலத்தில் முன்னேறுவதற்கான நல்ல வாய்ப்புகள் இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள், அலுவலக வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம்: மஞ்சள் பொருட்களை தானம் செய்யுங்கள்.
கன்னி:
வியாபாரத்தில் அதிக பொறுப்புகளும் பணிச்சுமையும் இருக்கும். இந்த நேரத்தில், வீடு மற்றும் குடும்பத்தின் சிக்கல்களில் இருந்து உங்களுடைய கவனத்தை திசை திருப்பி, உங்கள் வணிகத்தில் கவனம் செலுத்துங்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் விரும்பியபடி இட மாற்றத்தைப் பெறலாம்.
பரிகாரம்: விநாயகருக்கு லட்டுகளை நைவேத்தியம் செய்யவும்.