மேஷம்:
இன்றைக்குத் தொழில் முயற்சிகள் வேகம் பெறும் நாளாக அமையும். இருந்தப்போதும் வியாபாரத்தில் அதிக ஆர்வத்தைத் தவிர்த்து நிதானமாக செயல்படவும். எவ்வித கடன் பரிவர்த்தனைகளிலும் ஈடுபட வேண்டாம். பெரியவர்களை அனுசரித்தும்,புத்திசாலித்தனமாக பணிகளை மேற்கொள்ளவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். புதிய வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கைகூடும்.
பரிகாரம்: பைரவர் கோயிலிக்கு இனிப்பு பிரசாதம் வழங்கி வழிபடவும்.
ரிஷபம்:
தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மூத்த அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்பு வெற்றியைக் கொடுக்கும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். முக்கிய விஷயங்களில் முடிவு எடுக்கும் போது நிதானம் தேவை. உடன் பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். விளையாட்டுத் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்துக் கொள்வீர்கள்.
பரிகாரம்: துர்க்கை கோவிலில் வழிபாடு நடத்தவும்.
மிதுனம்:
குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் நாளாக அமையும். குடும்ப பொருளாதாரத்திற்காக செலவு செய்ய நேரிடும். விலையுயர்ந்த பொருள்களை கையாள்வதில் கவனம் வேண்டும். வியாபாரப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த அலைச்சலுக்கு ஏற்ப அதன் மூலம் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும்.
பரிகாரம்: விநாயக மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
கடகம்:
இன்றைக்கு வெற்றி கிடைக்கும் நாளாக அமையும். மனதில் எண்ணிய காரியங்கள் கைகூடும். கிடைக்கும் வளங்களில் கவனம் செலுத்தவும். கடன் வாங்குவதைத் தவிர்க்கவும் இல்லையென்றால் திருப்பிச் செலுத்துவதில் கடினமாகிவிடும். கூட்டாளிகளின் ஒற்றுமை மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உங்களுக்குப் பின்னால் நடக்கும் சதி தொடர்பான முக்கிய தகவல்கள் சிலரின் உதவியால் அறிவீர்கள். தொழில் வியாபாரத்தில் சுபம் உண்டாகும்.
பரிகாரம்: கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் சமர்பிக்கவும்.
சிம்மம்:
இன்றைக்குத் திறமைக்கான வெற்றியைப் பெறுவீர்கள். வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறப்பானதாக அமையும். முதலீட்டில் நஷ்டம் ஏற்படும் என்பதால் அவசரம் கொள்ளாமல் புத்திசாலித்தனமாக சில பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும். சொந்த வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படும் சூழல் உருவாகும். தைரியத்துடன் எதிர்க்கொள்ள முயலுங்கள்
பரிகாரம்: செல்லப்பிராணிகளுக்கு உணவு பரிமாறுங்கள்.
கன்னி:
இன்றைக்கு எந்தவொரு பணியையும் துணிவுடன் மேற்கொள்ளவேண்டும். தயக்கம் காட்டக்கூடாது. பொருளாதாரத்தில் வணிகர்கள் சிறந்த முயற்சிகளைப் பெறுவார்கள். எந்தவொரு ஆபத்தான செயல்களிலும் ஆர்வம் காட்ட வேண்டாம். பங்குச் சந்தை மற்றும் வணிகத்தில் பல நஷ்டங்கள் ஏற்படும். உங்களின் கலைத்திறன் பலம் பெறும். எந்தவொரு விஷயத்தைச் செய்வதற்கு முன்னதாக நிதானம் தேவை.
பரிகாரம்: ஹனுமான் மந்திரத்தை உச்சரிக்கவும்.
துலாம்:
இன்றைக்கு தொழில் சிறந்து விளங்கும் சூழல் ஏற்படும். பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. எந்தவொரு வேலையையும் பொறுமையுடன் செயல்படவும். தொலைத்தூர நாட்டு விவகாரங்களில் சுறுசுறுப்பு இருக்கும். கொடுக்கல் மற்றும் வாங்கல் விவகாரங்களில் தெளிவு அதிகரிக்கும். தொழில் விஷயங்களில் கண்ணியத்தைக் கடைப்பிடிக்கவும். சொந்த வாழ்க்கையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.
பரிகாரம்: ஆலமரத்தடியில் நெய் தீபம் ஏற்றவும்.
விருச்சிகம்:
இன்றைக்கு தனவரவு மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கும். அதே நேரம் வேலையில் அதிக நேரம் செலவிடும் சூழல் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். பொருளாதார நடவடிக்கைகள் வலுப்பெறும். நண்பர்களின் உதவியால் வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: ஹனுமான் மந்திரத்தை 7 முறை உச்சரிக்கவும்.
தனுசு:
இன்றைக்குப் பொருளாதார லாபம் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். தொழிலதிபர்கள் செல்வாக்குடன் இருப்பார்கள். வாழ்க்கையில் மற்றும் தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மேம்படும். நீங்கள் மேற்கொள்ளும் செயலால் உங்களுக்கு புகழும் மரியாதையும் அதிகரிக்கும். சாதகமான சூழலால் உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் சூழல் அதிகரிக்கும்.
பரிகாரம்: கூண்டில் உள்ள பறவைகளை விடுவிக்கவும்.
மகரம் :
இன்றைக்கு நீங்கள் எடுக்கும் அனைத்துக் காரியங்களும் வெற்றியடையும். தொழில் வியாபாரத்தில் விரும்பிய முடிவுகள் உங்களுக்கு கிடைக்கும். குழுக்களாக செயல்படுவது உங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். வேலைகளின் முன்னேற்றம் காண்பீர்கள். நீண்ட கால திட்டங்களை விரைவுபடுத்தும் சூழல் உருவாகும். நல்ல லாபம் கிடைக்கும் நாள் இன்று. தொழில் வல்லுநர்களின் ஆதரவு கிடைக்கப்பெறுவீர்கள்.
பரிகாரம்: விநாயகருக்கு லட்டுகளை படையுங்கள்.
கும்பம்:
எந்தவொரு வேலையையும் நிலுவையில் வைத்திருக்க வேண்டாம். வேகமாக செய்யும் வேலைகளில் வெற்றி காண்பீர்கள். நெருங்கியவர்கள் தரக்கூடிய ஆலோசனைகள் சிறப்பானதாக முடியும். செலவுகள் மற்றும் பட்ஜெட்டில் கவனம் செலுத்தவும். வணிக வியாபாரத்தில் விழிப்புடன் செயல்படவும். தந்திரமான நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
பரிகாரம் : குல தெய்வ வழிபாடு மேற்கொள்ளவும்.
மீனம்:
இன்றைக்கு அலுவலகத்தில் பொறுப்புடன் நடந்துக் கொள்வதன் மூலம் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தை மேம்படுத்தும் சூழல் உண்டாகும். வியாபாரத்தில் வரவு மற்றும் செலவு சமநிலையில் இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பல்வேறு முயற்சிகளின் மூலம் தொழிலில் சிறந்து விளங்குவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும்.
பரிகாரம்: தாய்க்கு இனிப்பு வழங்குங்கள்.