கடகம்:
வணிகம் சார்ந்த புதிய திட்ட பணிகளை தொடங்கலாம். பார்ட்னரிடமிருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கும். வேலையை மாற்ற விரும்பும் நபர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இன்றைய தினம் முக்கிய பணிகளை நிறைவு செய்வீர்கள். முக்கியத்துவம் வாய்ந்த நபர்களை சந்திப்பீர்கள்.
பரிகாரம் – மாலையில் ஆலமரத்தடியில் விளக்கு ஏற்றவும்.
கன்னி:
தற்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் ப்ராஜெக்ட்டுகள் மற்றும் பணிகளில் ஏதேனும் தடைகள் ஏற்படலாம்.எந்த ஒரு விவாதத்தையும் தவிர்க்க வேண்டும். இன்றைய தினம் முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுவதற்கு முன்பாக ஆவணங்களை சரியாக படித்து பார்க்கவும். இல்லையென்றால் இழப்புகள் ஏற்படும்.
பரிகாரம் – மாற்றுத் திறனாளி நபருக்கு உதவி செய்யவும்.
துலாம்:
இன்றைய தினம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். முக்கிய பணிகளை தொடங்குவதற்கு முன்பாக துறை சார்ந்த வல்லுனர்களிடம் ஆலோசனை பெறவும். உங்கள் வாழ்க்கை துணை மற்றும் வணிக பாட்னார்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூடுதல் வருமானத்திற்கான வழியை பெறுவீர்கள்.
பரிகாரம் – எறும்புக்கு வைக்கும் மாவில் இனிப்பு கலக்கவும்.
மகரம்:
இன்றைய தினம் உங்களுக்கு அரசு அங்கீகாரம் கிடைக்கும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து இன்றைக்கு நீங்கள் கடன் பெற விரும்பினால், அதை தவிர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் இந்த கடனை திருப்பிச் செலுத்துவது மிகவும் கடினமாக இருக்கும். பழைய நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம் – சரஸ்வதிக்கு வெள்ளை நிற பூ மாலை அணிவிக்கவும்.
மீனம்:
இன்றைய தினம் கவனம் பெறுகின்ற புதிய திட்டங்கள் எதிர்காலத்தில் பலன் தருவதாக அமையும். சட்ட ரீதியான எந்தவித வழக்குகள் அல்லது பிரச்சினைகளில் இன்றைக்கு நீங்கள் வெற்றி அடைவீர்கள். திருமண உறவுகளில் மகிழ்ச்சி நீடிக்கும். குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்கவும்.
பரிகாரம் – துர்க்கை அம்மன் கோவிலில் விளக்கு ஏற்றவும்.