மேஷம்:
பண பரிமாற்றம் செய்வதில் அதிக கவனம் தேவை. அதிக உற்சாகத்துடன் செயல்படுவதை தவிர்க்க வேண்டும். கொள்கைகளை பின்பற்றி நடப்பது மிகவும் நல்லது .எடுத்த காரியத்தை முடிப்பதற்காக அதிக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதையும் யோசித்து செய்வீர்கள். அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டால் ஆபத்துகளில் மாட்டிக் கொள்ள நேரிடும்.
பரிகாரம் - சிறுமிகளுக்கு இனிப்புகள் வழங்க வேண்டும்
கடகம்:
அலுவலகத்தில் புதிய பொறுப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த துறையில் வேலை கிடைக்கும். சுற்றியுள்ளவர்களிடமிருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். லாபத்தை அதிகரிப்பதற்கு இன்று வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் - ஸ்ரீ எந்திரத்தை வழிபட்டு எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும்
சிம்மம்:
தொழிலில் சுயநலமாக செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் புதிய வேலை திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படலாம். வேலையில் நல்ல நிலைமையை அடைவீர்கள். தொழில் நன்றாக இருக்கும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். தொழிலதிபர்கள் பெரிய அளவில் யோசித்து தொழிலை விரிவுபடுத்த முயற்சி செய்யலாம்.
பரிகாரம் - அலுவலகத்தில் விநாயகரை வழிபடுவது நல்லது.
கன்னி:
பொருளாதாரத்தில் வலுவான நிலையை அடைய புதுவிதமான யோசனைகளை செயல்படுத்துவீர்கள். எதிர்பார்த்த குறிக்கோளை விரைவாக அடைவீர்கள். லாபம் அதிகரிக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் நன்றாக இருக்கும். தொழில் போட்டிகள் உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.
பரிகாரம் - ஓடும் நீரில் தேங்காயை விட வேண்டும்.
துலாம்:
வேலைக்கு செல்பவர்களுக்கு நாள் எப்போதும் போல இருக்கும். காலம் தவறாமல் அனைத்து செயல்களையும் செய்வது நல்லது. முதலீடுகள் செய்வதில் கவனம் தேவை. பொருளாதார ரீதியாக அதிக கவனம் தேவை. அலுவலகம் மற்றும் தொழிலில் அதிகம் கவனம் தேவை. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் உடன் வேலை பார்ப்பவரிடமிருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும்.
பரிகாரம் - அனாதை ஆசிரமத்திற்கு உணவை தானம் அளிக்க வேண்டும்.
விருச்சிகம்:
தொழிலில் உங்கள் முயற்சிக்கு ஏற்ப பலன் கிடைக்கும். அலுவலகத்தில் செயல் திறன் அதிகரிக்கும். நேரத்திற்கு அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். முக்கியமான சில விஷயங்ளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். லாபம் அதிகரிக்கும் நாள்.
பரிகாரம் - கடுகு எண்ணெய் தடவிய ரொட்டியை கருப்பு நாய்க்கு உணவு அளிக்க வேண்டும்.
தனுசு:
அலுவலக சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரத்தை தவிர்ப்பது நல்லது. முதலீடுகள் சம்பந்தமாக ஆலோசனை பெறுவது நல்லது. அலுவலகம் மற்றும் தொழிலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்களில் அதிக கவனம் தேவை. சுய ஒழுக்கத்தில் கவனம் தேவை. சேமிப்புகளை மேற்கொள்வது நல்லது.
பரிகாரம் - கிருஷ்ணருக்கு சர்க்கரை மிட்டாய் வைத்து வழிபட வேண்டும்.
மகரம்:
கடின முயற்சியின் மூலம் அலுவலகத்தில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். தொழிலில் புதிய தொடர்புகள் உண்டாகும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில், நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும் போதே நீங்கள் விரும்பிய விஷயங்களை சாதித்துக் கொள்வது நல்லது. லாபம் அதிகரிப்பதற்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
பரிகாரம் - வீட்டை விட்டு வெளியே செல்லும்போது பெரியவர்களிடம் ஆசி பெற்று செல்ல வேண்டும்
கும்பம்:
தொழில் அள்ளது வேலை சம்பந்தமான நேர்காணல்கள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும். முயற்சிகள் அதிகரிக்கும். புதிய சாதனைகளை மேற்கொள்வீர்கள். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். சேவை அளிக்கும் துறைகளில் பணிபுரிவோருக்கு நாள் நன்றாக இருக்கும்
பரிகாரம் - சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்தாபிஷேகம் செய்ய வேண்டும்
மீனம்:
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் வருமானம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். தொழில் நன்றாக இருக்கும். எதிர்பார்த்த வெற்றியை ஈட்டுவீர்கள். செல்வம் அதிகரிக்கும்.
பரிகாரம் - கிருஷ்ணர் கோவிலுக்கு புல்லாங்குழல் காணிக்கை அளிக்க வேண்டும்.