மேஷம்:
தடைபட்ட சில காரியங்களை மீண்டும் ஆரம்பித்து வெற்றிகரமாக முடிக்க முயற்சி செய்வீர்கள். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும் நாள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற நாள். அலுவலகத்தில் வேலை பார்ப்பவருக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு,
பரிகாரம்: ஶ்ரீ ஷுக்தா மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
சிம்மம்:
குடும்பத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளின் தாக்கம் அலுவலகத்தில் நீங்கள் செய்யும் வேலையில் எதிரொலிக்கும். குடும்பம் மற்றும் அலுவலக வேலைகள் ஆகியவற்றை பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்வது நல்லது. முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். வேலையில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
பரிகாரம்: விலங்குகளுக்கு தேவைப்படும் சேவையை செய்வது நன்மை கொடுக்கும்
துலாம்:
அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் உண்டாகும். புதிய மனிதர்களிடம் கவனம் தேவை. இல்லையெனில் தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற நாள் என்றாலும் அனுபவசாலிகளிடம் அறிவுரை பெற்று செயலில் இறங்குவது நல்லது.
பரிகாரம்: புதன் கிரகத்தோடு சம்பந்தப்பட்ட பொருட்களை தானம் செய்ய வேண்டும்