மேஷம்: அலுவலகத்தில் இயந்திரங்கள், ஊழியர்கள் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாகவும், நேர்மையாகவும் பணியாற்றினால், பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். உங்கள் வணிக முடிவுகளை எப்போதும் நீங்கள் மட்டுமே எடுக்கவும்.
பரிகாரம்: வேலைக்கு செல்லும் போது அல்லது வணிகம் தொடங்கும் போது குங்குமப்பூ சாப்பிடுவது மிகவும் நல்லது
ரிஷபம்: வணிகத்தில் இலக்குகளை அடைய கடின உழைப்பு தேவை. கடின உழைப்பிருந்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும். பார்ட்னர்ஷிப் தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் கூடும். அலுவலக ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும்.
பரிகாரம்: தினசரி சூரியனின் 12 பெயர்களை உச்சரியுங்கள். வேலை மற்றும் வணிகத்தில் முன்னேற்றம் காணப்படும்
கடகம்: வணிகத்தில் இன்று உங்களுக்கு புதிய ப்ரோபோசல்கள் கிடைக்கும். கடினமாக வேலை செய்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும். பார்ட்னர்ஷிப் தொழிலில் இருப்பவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். அரசாங்க ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது.
பரிகாரம்: ஒரு சிவப்பு மிளகாய், 27 தானியங்கள் மற்றும் ஐந்து சிவப்பு நிற பூக்களை ஆஞ்சநேயர் கோவிலில் வைத்து வழிபட்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
கன்னி: நீங்கள் வேலை செய்யும் முறையில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டும். பப்ளிக் ரிலேஷன்ஸ் என்பது உங்களுக்கு வருமானம் ஈட்டக்கூடிய புதிய தொழிலாக அமையும். எனவே உங்களுடைய நெட்வொர்க்கை வளர்த்துக்கொள்ளுங்கள். அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
பரிகாரம்: முடிச்சு இருக்கும் மஞ்சள் மற்றும் ஐந்து அரச இலைகளை தலைக்கு கீழ் வைத்து இருப்பது வணிகத்தில் நல்ல முன்னேற்றங்களை கொடுக்கும்.
விருச்சிகம்: இந்த நேரத்தில், மற்றவர்களின் ஆலோசனை உங்களுக்கு ஏதேனும் பிரச்சனையை உருவாக்கலாம். எனவே, நீங்களே உங்கள் வேலைகள் சார்ந்த அனைத்து முடிவுகளை எடுக்கவும். அலுவலகத்தில் பணியாற்றும் ஊழயர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.
பரிகாரம்: ஏழைகளுக்கு பச்சை நிற ஆடைகளை தானம் செய்தால் வணிக உறவுகள் வலுவாகும்
கும்பம்: வேலை செய்யும் இடத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும். இதை செய்தால் நிச்சயமாக உங்கள் பிரச்சனைகள் தீர்ந்துவிடும். அரசாங்க ஊழியர்கள் மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டை பெறுவார்கள்.
பரிகாரம்: கருப்பு கடலை, கருப்பு உளுந்து, கருப்பு துணி மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவற்றை தான் செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்
மீனம்: அலுவலகம் மற்றும் வணிகம் சம்மந்தப்பட்ட சில முக்கியமான உறுதியான முடிவுகள் எடுக்க வேண்டும். உங்களுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், முன்னேற்றம் காண, கடினமாக உழைக்க வேண்டும். அலுவலக ஊழியர்கள் வேலை பளு அதிகம் இருந்தாலும், இன்று அதை செய்து முடித்து விடுவர்கள்.
பரிகாரம்: ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்