மேஷம்:
பொறுப்புமிக்க நபர்கள் மற்றும் மூத்தவர்களின் வார்த்தைகளை கவனமுடன் கேட்கவும். வர்த்தக நடவடிக்கைகளில் வேகம் காட்டலாம். விதிகள் மற்றும் சட்டங்களை கடைப்பிடிக்கவும். உங்கள் திறன் அனுபவம் மேம்பட இருக்கிறது. மனக்கவலை அடைய வேண்டாம். சொந்த முயற்சியில் லாபம் அடைவீர்கள்.
பரிகாரம் - கிருஷ்ணருக்கு மிட்டாய் படைக்கவும்.
மிதுனம்:
உங்களுக்கான மகிழ்ச்சி மற்றும் வளம் அதிகரிக்க உள்ளது. உங்கள் எண்ணம் எவ்வளவு பெரியதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு செல்வம் பெருகும். வணிக நடவடிக்கைகள் சிறப்பாக அமையும். தொழில்துறை வல்லுநர்களின் ஆலோசனையை பெறுவீர்கள். வங்கி முதலீட்டுக்கான ஆர்வம் அதிகரிக்கும்.
பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.
சிம்மம்:
புரிந்துணர்வு மற்றும் உள்ளுணர்வு அடிப்படையில் முன்னோக்கிச் செல்லுங்கள். மதிய வேளை வரையில் எதிர்பாராத முடிவுகள் அமையும். உடனடி விவாதங்கள் குறித்து கவனம் செலுத்தவும். பொருளாதார சூழல் வழக்கத்தை விட சிறப்பாக அமையும். எதிலும் அவசரம் காட்ட கூடாது.
பரிகாரம் - அனுமன் மந்திரத்தை 7 முறை உச்சரிக்கவும்.
கன்னி:
வணிக நடவடிக்கைகளில் தைரியத்தை வெளிப்படுத்துவீர்கள். உங்களுக்கான வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். வர்த்தக நடவடிக்கைகள் மேம்படும். உங்களுக்கான லாப சதவீதம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் பொறுப்புகளை நிறைவு செய்வீர்கள். வருமானத்திற்கான புதிய வாய்ப்பு ஏற்படும்.
பரிகாரம் - சிறைப் பறவைகளை விடுவிக்கவும்.
துலாம்:
உங்கள் அலுவலகப் பணிகளை நிறைவு செய்வதில் சிரமங்கள் ஏற்படலாம். இருப்பினும் உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உண்மை எதுவோ அதன் பக்கம் நிற்க வேண்டும். நிதி விவகாரங்களில் தெளிவான எண்ணம் கொண்டிருக்க வேண்டும்.
பரிகாரம் - ஓடும் நீரில் வெள்ளிக்காசு போடவும்.
தனுசு:
வணிகம் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளை கவனமுடன் மேற்கொள்ளவும். வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். அலுவலகத்தில் எதிரிகள் குறித்து கவனமுடன் இருக்கவும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். இல்லையெனில் வருத்தம் அடைவீர்கள்.
பரிகாரம் - காயத்ரி மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
மகரம்:
இன்றைக்கு அனைத்து வகையிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவீர்கள். அலுவலகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை மற்றும் மரியாதை அதிகரிக்கும். தொழில் நடவடிக்கைகள் ஊக்கம் அடையும். இலக்குகளை எட்டுவீர்கள். நல்ல காரியங்கள் வேகமெடுக்கும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
பரிகாரம் - விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டவும்.
கும்பம்:
பணியிடத்தில் நிர்வாக மேலாண்மை திறனுக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். உங்கள் பணித்திறன் மற்றும் தரம் அதிகரிக்கும். இலக்கு நிர்ணயம் செய்வதில் கவனம் செலுத்தவும். சமயத்திற்கு தகுந்தாற்போல செயல்படவும். திடீரென்று லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
பரிகாரம் - தாய்மார்களுக்கு இனிப்பு வழங்கவும்.