ரிஷபம்:
வியாபாரிகளுக்கு இன்று லாபமும் செல்வாக்கும் அதிகரிக்கும். பிறரின் நம்பிக்கையைப் பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். ஊழியர்களுக்கு பணியிடத்தில் வெற்றி கிடைக்கும். இன்று உங்களின் சுறுசுறுப்பு மூலம் சிறப்பான பலன்களை பெறுவீர்கள். இன்று உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பரிகாரம்: வயதில் மூத்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும்
சிம்மம்:
இன்று நீங்கள் சுயநலமாக இருப்பதை தவிர்க்கவும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகள் பெரிய வாய்ப்புகளை பெறுவார்கள். அலுவலகத்தில் உங்கள் செயல் திட்டங்கள் வேகம் பெறும். உங்களது அனுபவ பலன்கள் இன்று வேலைகளை முடிப்பதில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபடுங்கள்
கும்பம்:
புதிய இலக்குகளை அடைவதில் உற்சாகமாக செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் லாபம் அதிகம் இருக்கும்.இன்று நீங்கள் புத்திசாலித்தனமாக செயயும் முதலீடு எதிர்காலத்தில் பெரியளவில் கைகொடுக்கும். வியாபாரிகள் தங்கள் தொழில் சார்ந்த டீல்களில் வெற்றி காண்பார்கள்.
பரிகாரம்: சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யவும்
மீனம்:
இன்று உங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வருமான ஆதார வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். உயரதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தில் இன்று சிறப்பாக செயல்படுவார்கள். செல்வம் பெருகும் மற்றும் வெற்றி உணர்வு அதிகரிக்கும்.
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் புல்லாங்குழல் வைத்து அர்ச்சனை செய்யுங்கள்