முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (மே 16) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

 • 112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  மேஷம்:
  எந்தவொரு புதிய விஷயத்தையும் நீங்கள் புரிந்துகொள்ளும் கோணம் மாற இருக்கிறது. உங்கள் வாழ்வியல் மேம்படும். அதற்கு கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கலாம். பணியிடத்தில் நல் வாய்ப்புகள் கிடைக்கும்.
  பரிகாரம் - மீன்களுக்கு உணவளிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  ரிஷபம்:
  பிறருடைய நடவடிக்கையால் பதற்றம் அடைய வேண்டாம். இல்லையென்றால் இழப்புகள் ஏற்படும். கொள்கை விதிகளை கடைப்பிடிக்கவும். உறவினர்களுக்கு மதிப்பளிக்கவும். அன்புக்குரிய நபர்களுடன் நினைவுகளை பகிர்ந்து கொள்வீர்கள். பாரம்பரிய பணிகளை செய்வீர்கள்.
  பரிகாரம் - எறும்புக்கு இனிப்பு கலந்த மாவு வைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 312

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  மிதுனம்:
  வீட்டில் அன்பு மற்றும் புரிந்துணர்வு காணப்படும். ப்ராஜக்டுகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் ஆராய்ச்சியை தொடர்ந்து மேற்கொள்ளவும். வணிகத்தில் உள்ள நபர்களுக்கு லாபம் கிடைக்கும். இன்றைய தினம் உங்கள் பொறுப்புகளை உரிய சமயத்தில் நிறைவு செய்வீர்கள்.
  பரிகாரம் - பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறவும்.

  MORE
  GALLERIES

 • 412

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  கடகம்:
  இன்றைய தினம் நல்ல நாளாக அமையும். மதிப்புமிக்க நபரின் ஆலோசனையின் பேரில் உங்கள் பாதை எளிமையாகும். பணம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் பிறக்கும். சின்ன, சின்ன கோபங்களை விலக்கிக் கொள்ளவும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
  பரிகாரம் - பசுவுக்கு பசும்புல் வைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 512

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  சிம்மம்:
  குடும்ப உறுப்பினர் மூலமாக உங்கள் மரியாதை அதிகரிக்க இருக்கிறது. வளர்ச்சி வேண்டும் என்றால் புதிய வழிகளை கடைப்பிடிக்க வேண்டும். சொத்து தொடர்பான வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான நாளாக அமையும். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தவும்.
  பரிகாரம் - லெட்சுமியை வழிபடவும்.

  MORE
  GALLERIES

 • 612

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  கன்னி:
  தேக்கமடைந்த பணிகள் இன்று எளிமையாக நிறைவடையும். பரஸ்பர நம்பிக்கையின் பேரில் குடும்ப உறவுகள் பலப்படும். உங்களுக்கான வருமானம் பெருகும். நீங்கள் துரிதமாக வெற்றி பெற நினைத்தால் தேவையற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தக் கூடாது.
  பரிகாரம் - அனுமன் மந்திரம் உச்சரிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 712

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  துலாம்:
  இன்றைய தினம் உங்கள் மனம் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் மத்தியில் அற்புதமான நாளாக அமையும். தொழிலதிபர்கள் சாதுர்யமாக செயல்படவும். நிதி சார்ந்த பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமானதாக முடியும்.
  பரிகாரம் - குரு அல்லது மூத்தவர்களின் ஆலோசனையை பெறவும்.

  MORE
  GALLERIES

 • 812

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  விருச்சிகம்:
  அதிகாரிகள் மத்தியில் சிறப்புக் கவனத்தை பெறுவீர்கள். பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன் இன்று வசூலாகும். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழல் தென்படும். பெரும் நிகழ்ச்சியை நடத்துவதற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும்.
  பரிகாரம் - விநாயகருக்கு லட்டு படைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 912

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  தனுசு:
  உங்கள் ஜனரஞ்சகமான நடவடிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். தவறான முதலீட்டு திட்டங்களில் பணத்தை செலுத்த வேண்டாம். துரிதமாக பணம் ஈட்ட நினைத்தால் இழப்பு ஏற்படும். கல்வியில் உங்கள் திறமை சிறப்பாக வெளிப்படும். தம்பதியர்களின் வாழ்வில் மகிழ்ச்சி நிலவும்.
  பரிகாரம் - சிவ மந்திரம் உச்சரிக்கவும்.

  MORE
  GALLERIES

 • 1012

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  மகரம்:
  அரசியல் செய்வதை கைவிட்டு உங்கள் பணிகளின் மீது கவனம் செலுத்தவும். உங்கள் மனதில் புதிய ஆர்வம் தோன்ற இருக்கிறது. பிறர் மீது அதிகப்படியான நம்பிக்கை கொண்டால் பணத்தை இழக்க நேரிடலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
  பரிகாரம் - வெள்ளை நிற பொருளை தானம் செய்யவும்.

  MORE
  GALLERIES

 • 1112

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  கும்பம்:
  இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமானதாக அமையும். புதிய நம்பிக்கையுடன் பொழுதை தொடங்குவீர்கள். வணிகத்தில் ஏதேனும் மாற்றம் செய்யும் முன்பாக மூத்தவர்களை ஆலோசிக்கவும். இல்லை என்றால் இழப்புகளை சந்திக்க நேரிடலாம்.
  பரிகாரம் - விநாயகருக்கு இனிப்பு படைக்கவும்.

  MORE
  GALLERIES

 • 1212

  செவ்வாய்க்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (மே 16, 2023) வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.!

  மீனம்:
  பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். வணிகர்களுக்கு தொழிலில் அதிரஷ்டம் உண்டாகலாம். குடும்பத்தில் உங்கள் நடவடிக்கைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.
  பரிகாரம் - சிவ மந்திரம் உச்சரிக்கவும்.

  MORE
  GALLERIES