மேஷம்:
தொழிலில் அகல கால் வைப்பதை தவிர்க்கவும். இப்போதைக்கு கடன்கள் வாங்க வேண்டாம். முதியவர்களிடம் நல்ல பெயரை சம்பாதிப்பீர்கள். ஸ்மார்ட் ஆக வேலை செய்யுங்கள். வேலை வழக்கம் போல இயங்கும். பயணங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்த்து விடுங்கள். தொழில் விஷயத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிக்கான பலனை பெறுவீர்கள்.
பரிகாரம் - பைரவ கோவிலில் இனிப்பு வைத்து வழிபடவும்.
ரிஷபம்:
பணியிடத்தில் பொருளாதாரம் சம்பந்தமான வேலைகளை முன்னோக்கி கொண்டு செல்வீர்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. அலுவலகத்தில் வேலை வழக்கம் போல இயங்கும். அலுவலகத்தில் உள்ள மேல் அதிகாரிகளுடன் மீட்டிங் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உடன் பணிபுரியும் நபர்களின் உதவியை பெறுவீர்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். கிரியேட்டிவாக சிந்திப்பீர்கள்.
பரிகாரம் - துர்க்கை அம்மன் கோவிலில் துர்க்கை மந்திரத்தை பாடி வழிபடவும்.
மிதுனம்:
பொருட்களுக்காக அதிக செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இது உங்கள் பொருளாதாரத்தை பாதிக்கக்கூடும். விதிகளை பின்பற்றி நடப்பீர்கள். வீடு அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. தொழில் சுமூகமாக நடைபெறும்.
பரிகாரம் - பிள்ளையாருக்கு அருகம்புல் வைத்து படைத்து பிள்ளையார் மந்திரத்தை 108 முறை பாடவும்.
கடகம்:
பணியிடத்தில் வெற்றியை ருசிப்பீர்கள். உங்களிடம் உள்ள வளங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். செல்வம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடன் வாங்க வேண்டாம், ஏனெனில் அதை திருப்பி செலுத்துவதில் உங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களை பற்றி பேசப்படும் தவறான கருத்துக்கள் குறித்த தகவல் உங்கள் காதுக்கு வந்து சேரலாம். தொழிலில் சிறந்த முன்னேற்றத்தை காண்பீர்கள்.
பரிகாரம் - கிருஷ்ண பகவானுக்கு இனிப்பு வைத்து படைக்கவும்.
சிம்மம்:
உங்களது திறமைகளை பயன்படுத்தி உங்களின் தற்போதைய பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். முதலீடு செய்தால் இழப்பு ஏற்படலாம். ஆகவே பண பரிமாற்றங்களை புத்திசாலித்தனமாக செய்யவும். வாகனங்களை கவனமாக ஓட்டவும்.
பரிகாரம் - கருப்பு நாய்க்கு கடுகு எண்ணெய் தடவிய பிரட்டை தீணியாக கொடுக்கவும்
தனுசு:
பொருளாதாரத்தில் அதிக லாபம் ஈட்டுவீர்கள். தொழில் செய்வதற்கு சிறப்பான நாளாக அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாய்ப்புகள் வந்து குவியும். தொழில் ரீதியாக முன்னேற்றத்தை காண்பீர்கள். உங்களுக்கான புகழும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் திட்டம் அனைத்தும் வெற்றி பெறும்.
பரிகாரம் - கூண்டில் அடைபட்டுள்ள பறவைகளுக்கு சுதந்திரம் அளிக்கவும்.
மகரம்:
தொழிலில் நீங்கள் நினைத்த முடிவுகளை பெறுவீர்கள். தடைகள் வந்த வழியே செல்லும். பிறருடன் சேர்ந்து பணி புரிவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களுக்கு தெரிந்தவர்களின் உதவியை பெறுவீர்கள். நீண்ட கால திட்டங்களை விரைவாக செயல்படுத்துவீர்கள். உடன் பணிபுரிவோரின் உதவியை பெறுவீர்கள்.
பரிகாரம் - பிள்ளையாருக்கு லட்டு வைத்து வழிபடவும்
கும்பம்:
தொழில் விஷயத்தில் எந்த ஒரு வேலையையும் நிலுவையில் வைக்க வேண்டாம். வேலை வழக்கம் போல இயங்கும். உங்களுக்கு நெருங்கியவர்களின் ஆலோசனைகள் கேட்டு அதன்படி நடந்து கொள்வீர்கள். செலவு செய்வதில் கவனம் வேண்டும். தொழிலில் கவனமாக முடிவுகளை எடுங்கள். உங்கள் மேனேஜ்மென்ட் பற்றி தவறாக வேறு யாரிடமும் கூற வேண்டாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட எண்: 4 ; அதிர்ஷ்ட நிறம் ஊதா