மேஷம்:
இன்றைய நாள் உங்களுக்கு வெற்றிகரமான ஒரு நாளாக இருக்கும். தைரியமாக செயல்பட்டு செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முடிவெடுப்பதற்கு முன் அனுபவசாலிகளிடம் அறிவுரை கேட்பது நல்லது.
பரிகாரம்: சர்க்கரை மற்றும் அரிசி மாவை எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்.
துலாம்:
அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களிடம் இருந்து தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் இருந்து அங்கீகாரம் கிடைக்கும். நீங்கள் கொடுத்த பணம் இன்று உங்களுக்கு திரும்ப வர வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்: குரு மற்றும் முதியவர்களிடமிருந்து ஆசி பெற வேண்டும்.
விருச்சிகம்:
தொழில் செய்பவர்கள் இன்று நேர்மையுடன் செயல்படுவது நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. புதிய வழிகளில் பணம் வரவு உண்டாகும். இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.
பரிகாரம்: விநாயகருக்கு லட்டு காணிக்கை அளிக்க வேண்டும்.
கும்பம்:
மற்றவர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்க வேண்டாம் இதன் மூலம் தேவையற்ற நஷ்டங்களில் இருந்து தப்பிக்கலாம். கொள்கைகளை கடைபிடித்து வாழுங்கள். இதன் மூலம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பாரம்பரிய வேலைகளில் ஈடுபடுவீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களின் அறிவுரையை கேட்பது நல்லது.
பரிகாரம்: விநாயகருக்கு கொழுக்கட்டை காணிக்கை அளித்து வழிபட வேண்டும்.