ரிஷபம்
அனைவரிடமிருந்தும் தேவையான ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டம் தீட்டியபடி அனைத்தையும் செய்து முடிப்பீர்கள். செயல் திறன் அதிகரிக்கும். வேலையில் ஏற்படும் தடங்கல்கள் தானாகவே சரி ஆகிவிடும். எதிரிகளின் பலம் குறையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.
பரிகாரம் - விநாயகர் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும்.
கடகம்:
தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் தேவையற்ற விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வர்த்தகத்தில் இருப்பவர்கள் சிரத்தையுடன் செயல்களை செய்து முடிப்பதன் மூலம் நன்மை உண்டாகும். ஏதேனும் மோசடிகளில் சிக்க வாய்ப்பு உண்டு கவனம் தேவை.
பரிகாரம் - கருப்பு நாய்க்கு கடுகு எண்ணெய் தடவி ரொட்டியை உணவளிக்க வேண்டும்.
கன்னி:
தொழில் சம்பந்தப்பட்ட தொடர்புகள் அதிகரிக்கும். தொழில் விருத்தி செய்ய வாய்ப்புகள் உண்டு. உயர் அதிகாரிகளை சந்திக்க வாய்ப்புகள் உண்டு. செல்வம் அதிகரிக்கும். சகிப்புத்தன்மை வளர்த்துக் கொள்வது நல்லது. தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
பரிகாரம் - ஆலமரத்தின் அடியில் நெய் விளக்கு ஏற்று வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
அடாவடித்தனமாக இருப்பதையும் உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. எதையும் முன் கூட்டியே திட்டமிட்டு செய்வது நல்லது. சுற்றுச்சூழலுக்கு ஏற்றது போல் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிர்ஷ்டம் இருக்கும்.
பரிகாரம் - கூண்டில் அடைப்பட்ட பறவைகளை விடுவிக்க வேண்டும்.
தனுசு:
பொருளாதார சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. தொழில் செய்வதற்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்திசாலித்தனமாக வேலை செய்வது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
பரிகாரம் - பைரவர் கோவில் இனிப்புகள் தானம் அளிக்க வேண்டும்