மிதுனம்:
வேலைப்பளு சுற்று அதிகமாக இருக்கும். உங்களது வேலையை மற்றவர்களுடன் பகிர்ந்து அளிப்பதன் மூலம் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள முடியும். மற்றவர்களோடு மகிழ்ச்சியாக பழகுவது நன்மையை கொடுக்கும். அலுவலகத்தில் சில தவறுகள் செய்து உயரதிகாரிகளிடம் வசைகள் வாங்க வாய்ப்புகள் உண்டு. எனவே கவனம் தேவை.
பரிகாரம்: விநாயகரை வழி பட வேண்டும்.
துலாம்:
புதிய வேலைகள் துவங்க எண்ணம் இருந்தால் இன்றைக்கு சரியான நாளாக இருக்கும். எதிர்காலம் மற்றும் கடந்த காலம் பற்றி கவலைப்படாமல் நிகழ்காலத்தில் கவனத்தை செலுத்துவது நன்மையை கொடுக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்னர் அனுபவசாலிகளிடம் அறிவுரை பெறுவது நல்லது. உயர் அதிகாரிகளுடன் உள்ள உறவு பலப்படும்.
பரிகாரம்: சூரிய பகவானுக்கு நீர் காணிக்கை அளித்து வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
மற்றவர்களிடமிருந்து பெரும் அறிவுரையினால் சில பிரச்சனைகள் உண்டாகலாம். உங்களது முடிவுகளை நீங்களே எடுப்பது நல்லது. வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. மார்க்கெட்டிங் சம்பந்தப்பட்ட வேலைகளை தள்ளிப் போடுவது நல்லது. அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும்.
பரிகாரம்: பிராணாயாமம் பயிற்சி செய்து வர வேண்டும்.
தனுசு:
கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் எடுத்த காரியத்தை சாதிப்பீர்கள். வேலையில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. மார்க்கெட்டிங் பற்றிய நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் புரிபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாள்.
பரிகாரம்: மஞ்சள் நிற பொருட்களை ஞானம் அளிக்க வேண்டும்.
மகரம்:
தொழிலில் சில சவால்கள் இன்று நிறைந்து இருக்கும். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் உங்களது திறமையை நிரூபித்து வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் அல்லது அரசியல்வாதிகளுடன் ஏற்படும் தொடர்பு மூலம் நன்மைகள் வந்து சேரும். அதிக வேலைப்பளுவினால் சற்று மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
பரிகாரம்: பிராணாயாமத்தை பயிற்சி செய்து வர வேண்டும்.
மீனம்:
தொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நன்றாக யோசித்து செயல்படுவது நல்லது. கடின உழைப்பும் விடாமுயற்சியின் மூலம் வெற்றியை ஈட்டுவீர்கள். அலுவலகம் செல்வோருக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் தன்னுடைய செயல் திறனினால் அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.
பரிகாரம்: விநாயகரை வழிபட வேண்டும்