மேஷம்:
இன்றைக்கு கவனமுடன் எந்த விஷயங்களையும் கையாள வேண்டும். வியாபார விஷயங்களில் முடிவுகளை எடுக்கும் போது தெளிவான சிந்தனையுடன் செயல்படவும். வாழ்க்கையில் உங்களுக்கு தேவையற்ற வேலைகளில் நேரத்தை வீணாக்காதீர்கள். ஒருவேளை நீங்கள் உங்களது நேரத்தை தேவையில்லாமல் செலவிடும் போது பண இழப்பு மற்றும் முக்கிய வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு மோதகம் படைத்து வழிபடவும்.
ரிஷபம்:
இன்றைக்கு நிதானமுடன் இருந்தால் வெற்றி பெறும் சூழல் உண்டாகும். நிதி விஷயங்களில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமானதாக அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பணியிடத்தில் திருட்டு நடக்க வாய்ப்புள்ளதாக கவனமுடன் இருக்கவும். ஆன்லைன் மோசடிக்கு நீங்கள் பலியாக நேரிடும்.
பரிகாரம்: அனுமன் கோவிலுக்கு தேங்காய் பிரசாதம் வழங்கவும்.
மிதுனம்:
கஷ்டம் நிறைந்த நாளாக அமையும். இன்றைக்கு நிதி ரீதியாக பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். திடீர் வேலைகளைச் செய்ய கடன் வாங்க நேரிடலாம். நீங்கள் தொழில் அல்லது சொந்த வாழ்க்கையில் எந்த ஆவணத்திலும் நீங்கள் கையெழுத்திடும் முன்னதாக கவனமாக படிக்க வேண்டும்.
பரிகாரம்: அனுமன் மந்திரத்தை உச்சரிக்கவும்.
சிம்மம்:
இன்றைக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் மற்றும் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் சூழல் உள்ளது. பணத்தை செலவழிப்பதற்கு முன்னதாக நன்கு யோசனை செய்யவும். இல்லையென்றால் எதிர்காலத்தில் நீங்கள் வருத்தம் அடைய வேண்டியிருக்கும். வாழ்க்கையில் சேமித்து வைப்பதற்கு முயற்சி செய்யவும்.
பரிகாரம்: ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
கன்னி:
இன்றைக்கு உங்களது அலுவலக பணிகளில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதிகாரிகளின் பார்வையில் உங்களுக்கு நன்பெயர் கிடைக்காத அளவிற்கு பிரச்சனைகள் ஏற்படும். திடீர் பண ஆதாயமும் உருவாகக்கூடும். வாழ்க்கையில் யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள். இதனால் பல பிரச்சனைகளை நீங்கள் தவிர்க்கலாம்.
பரிகாரம்: கிருஷ்ணர் கோவிலில் மயில் தோகை வைத்து அர்ச்சனை செய்யுங்கள்.
துலாம்:
இன்றைக்கு பணியிடத்தில் கடின உழைப்பை நீங்கள் மேற்கொள்ள நேரிடும். வாழ்க்கையில் மகிழ்ச்சியான முடிவுகளை நீங்கள் எடுக்கும் சூழல் உண்டாகும். ஆனால் வியாபாரிகளுக்கு இந்த நாள் தொந்தரவாக இருக்கும் என்பதால், எந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன்னதாக கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.
பரிகாரம்: அனுமன் மந்திரத்தை உச்சரிக்கவும்.
தனுசு:
இன்றைக்கு தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் நாளாக அமையும். பல நாள்களாக கிடைக்காமல் இழுபறியில் இருந்த பணம் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியை அடைவீர்கள். வீண் வேலைகளில் உங்களது நேரத்தை வீணாக்காதீர்கள். ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களைச் செய்யாதீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்திருப்பதோடு, கொண்டாட்டமான சூழல் ஏற்படும்.
பரிகாரம்: பெரியவர்களின் ஆசிர்வாதம் பெற்று வீட்டை விட்டு வெளியேறவும்.
மகரம்:
இன்றைக்கு சிறு வணிகர்களுக்கு சிறப்பான நாளாகவே அமையும். நல்ல சலுகைகள் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் இல்லை. பண இழப்பு ஏற்படக்கூடும். எப்போதும் கவனமாக இருக்கவும். ஒருவரிடம் கடன் வாங்கும் போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்து வாங்கவும்.
பரிகாரம்: ஓம் நம சிவாய மந்திரத்தை 108 முறை சொல்லவும்.
கும்பம்:
இன்றைக்கு பொருளாதார நிலை மோசமடையும் சூழல் ஏற்படும். வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் திடீரென அதிகரிப்பது போன்று மனநிலை இருக்கும். யாரும் எதிர்பாராத நேரத்தில் பண இழப்பு ஏற்படக்கூடும். கவலை வேண்டாம். குடும்பத்தின் ஆதரவால் எப்போதும் நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும்.
பரிகாரம்: ராமர் கோவிலில் அமர்ந்து ராமரக்ஷா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யவும்.
மீனம்:
இன்றைக்கு அனைவரையும் அரவணைத்து செல்லக்கூடிய மனப்பக்குவம் உங்களுக்கு ஏற்படும். மாற்றம் பற்றி கவலைகள் வேண்டாம். உங்களது சகோதரர்களால் சில விஷயங்களில் தேவையில்லாத டென்சன் ஏற்படும். நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்த பணத்தை எளிதாக திரும்பப் பெறக்கூடிய சூழல் உங்களுக்கு ஏற்படும். எந்த வேலையைச் செய்தாலும் நிதானத்தை மட்டும் கைவிடாதீர்கள்.
பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றவும்.