மிதுனம்:
தொழில் வியாபாரத்தில் ஏற்கனவே இருந்து வரும் பிரச்சனைகள் இன்றும் நீடிக்கும். உங்களது பணிகளை திட்டமிட்டு முடிக்க முயற்சிக்கவும். இன்று உங்கள் காதுகளுக்கு வரும் எந்த ஒரு கிசுகிசு அல்லது வதந்திகளை நம்பாதீர்கள். உங்களது சொந்த திறமை மீது நம்பிக்கை வையுங்கள்.
பரிகாரம்: ஹனுமானுக்கு தேங்காய் வைத்து வழிபடவும்
கடகம்:
இன்று கிரக நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரிகள் தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் இன்று தீவிரமாக செயல்பட வேண்டும். மேலும் மார்க்கெட்டிங் மற்றும் மக்கள் தொடர்புகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அலுவலக வேலைகளை வீட்டிற்கு வந்த பிறகும் தொடர வேண்டிய நிலை ஏற்படலாம்.
பரிகாரம்: துர்காதேவிக்கு சிவப்பு நிற புடவை சாத்துங்கள்
சிம்மம்:
வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் இன்று மிகவும் தீவிரமாக செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் விரிவாக்கத் திட்டங்களை இன்று மறுபரிசீலனை செய்வதை உறுதி செய்யவும். இன்று எந்த ஒரு பெரிய அல்லது சிறிய முடிவை எடுக்கும் போது மூத்தவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையை பெறுங்கள்.
பரிகாரம்: குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் பொருட்களை பரிசாக கொடுங்கள்
துலாம்:
நீங்கள் கடனாக கொடுத்த பணம் இன்று உங்கள் கைகளுக்கு மீண்டும் வந்து சேரும். பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். எனினும் அலுவலகத்தில் ஃபைல் ஒர்க்ஸ் செய்யும் போது தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கவனமுடன் செயல்படவும்.
பரிகாரம்: லட்சுமி தேவி முன் தாமரை மலரை வைத்து வழிபடவும்
மீனம்:
வணிகம் தொடர்பான எந்தவொரு திட்டத்திலும் இன்று சிக்கல்கள் எழலாம். இருப்பினும் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அவற்றை நீங்கள் சிறப்பாக கையாள முடியும். வியாபாரிகள் தங்களது வணிகத்தில் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான வேலைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
பரிகாரம்: இன்று கால் எழுந்ததும் சூரிய பகவானை வழிபடுங்கள்