மேஷம்:
தொழில் முன்னேற்றம் காணும், அதனால் உற்சாகம் அடைவீர்கள். அலுவலகத்தில் திறமை மற்றும் அனுபவத்தைக் கொண்டு உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் சந்திப்பு இருக்கும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான பலன் கிடைக்கும். பொருளாதாரம் மேம்படும்.
பரிகாரம்: ஸ்ரீ சுக்தத்தைப் படியுங்கள்.
ரிஷபம்:
தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியான சாதனைகள் உண்டாகும். அவரவர் துறையில் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செல்படுவீர்கள். முதலீடு செய்யவேண்டும் என்று ஆசை இருந்தால் தவிர்க்கவும். எளிமையான வியாபாரம் வெற்றியடையும். இலக்கில் கவனம் செலுத்துவது அவசியம். நல்ல ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம்: அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றவும்.
கடகம்:
வியாபாரிகளின் பொருளாதார விவகாரங்கள் சாதகமாக இருக்கும். அலுவலகத்தில் வேகமாகச் செயல்படுவீர்கள். வேலை மாற விரும்புபவர்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிறந்த முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளும் பெறுவீர்கள். நீங்கள் பணிபுரியும் துறை சார்ந்து அதிக நேரம் செலவிடுங்கள், நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
பரிகாரம்: சூரிய பகவானுக்கு நீர் வழங்கவும்.
சிம்மம்:
தொழில் வியாபாரத்தில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். விடாமுயற்சியைக் கடைபிடித்து, கடினமாக உழைக்கும் இடங்களில் வெற்றி பெறுவீர்கள். நிதி விஷயங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பீர்கள். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். புத்திசாலித்தனமானவர்களிடமிருந்து கொஞ்சம் வலகி இருக்கவும். செலவுகளைக் கட்டுப்படுத்தவும்.
பரிகாரம்: ஊனமுற்றவருக்கு உதவி செய்யுங்கள்.
கும்பம்:
ஒத்துழைப்பு மனப்பான்மை இருந்தால், வேலை மற்றும் வியாபாரம் சிறக்கும். முதலீடு விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையில்லாமல் வாய்ப்புக்காக காத்திருபவர்கள் சிறிது காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. வியாபாரம் வசமாகும், நல்ல லாபம் கிடைக்கும், ஆனால் எதிலும் அவசரப்படக்கூடாது.
பரிகாரம்: பசுவிற்கு பசுந்தீவனம் கொடுங்கள்.