ரிஷபம்:
தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவுகளை எடுக்கும் பொழுது கவனமாக இருக்கவும். உங்களைத் தேடி வரும் பிரச்சனைகளை மிக எளிதாக தீர்த்து அதிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். சிறந்த நிலையை அடைய உங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வீர்கள். தேவையற்ற விஷயங்களில் நேரத்தை செலவிட வேண்டாம். அவ்வாறு செய்வது வீண் பண இழப்பு மற்றும் வாய்ப்புகள் தட்டி போவதற்கு வழிவகுக்கும்.
பரிகாரம்- பைரவ கோவிலில் தேங்காய் உடைத்து வழிபடவும்.
கடகம்:
பொருளாதார ரீதியாக இந்நாளில் ஒரு சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். பணம் சார்ந்த விஷயங்களில் பிரச்சனைகள் எழலாம். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். பணியிடத்தில் மோசடி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எந்த ஒரு ஆவணத்தையும் கையெழுத்திடும் முன் கவனமாக படிக்கவும்.
பரிகாரம்- பசுவிற்கு பச்சை புல் கொடுங்கள்
கும்பம்:
தொழிலதிபர்களுக்கு சிறந்த நாள். சிறந்த வாய்ப்புகள் தேடிவரும். மறுபுறம், ஊழியர்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். பண இழப்பு ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். பிறருக்கு கடன் கொடுக்கும் பொழுது யோசித்து செயல்படவும்.
பரிகாரம்- ராமன் கோவிலில் அமர்ந்து ராம்ரக்ஷஸ்தோத்திரம் மந்திரத்தை உச்சரிக்கவும்.
மீனம்:
அடுக்கடுக்காக பிரச்சனைகள் வந்து சேரும் நாள். பொருளாதார நிலை மோசமாகலாம். பணத்தை செலவழிக்கும் முன்பு நன்கு யோசித்து செயல்படவும். எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடலாம். எனினும் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.
பரிகாரம்- அனுமன் கோவிலில் நெய் தீபம் ஏற்றி, அனுமன் மந்திரத்தை பாடி வழிபடவும்.