மேஷம்:
வியாபாரிகள் இன்று தங்கள் வணிகம் தொடர்பாக சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். பெரும்பாலான முடிவுகள் சரியான பலன்களையே தரும். இன்று நடக்கும் மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். சக அலுவலக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக இருக்கலாம், எனவே கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: பசுவிற்கு உணவாக பச்சை புல் அல்லது கீரை கொடுக்கவும்
மிதுனம்:
சிரமங்கள் அல்லது இடையூறுகள் இருந்தாலும் இன்று உங்கள் வசம் கொடுக்கப்படும் பெரும்பாலான வேலைகளை குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் நிலுவையில் இருந்த கடனாக கொடுத்த தொகை இந்து உங்களுக்கு மீண்டும் கிடைக்கும். உத்தியோகபூர்வ பயணத்திற்கான வாய்ப்புகள் இன்று கிடைக்கும்.
பரிகாரம்: ஹனுமானுக்கு தீபாராதனை செய்து வழிபடுங்கள்
சிம்மம்:
வியாபாரிகள் தங்கள் தொழிலில் இன்று சில சவால்கள் மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால் விரைவில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். இறக்குமதி-ஏற்றுமதி தொடர்பான வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நல்ல ஒப்பந்தங்கள் இன்று கிடைக்கும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்
துலாம்:
இன்று ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும் என்றாலும் கடின உழைப்பிற்கான பலன்களும் சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் நாளின் இரண்டாம் பகுதியில் சிலதொழில் பிரச்சனைகளை சந்திக்கலாம். எனினும் விவேகமுடன் செயல்பட்டால் அதை தீர்க்க முடியும்.
பரிகாரம்: ஏழைகளுக்கு சிவப்பு பழங்களை தானம் செய்யுங்கள்
விருச்சிகம்:
இன்று வியாபாரிகள் முன்னெடுக்கும் எந்தவொரு வணிக திட்டமும் வெற்றிகரமாக இருக்கும். அதே நேரம் அனுபவம் வாய்ந்த நபரின் வழிகாட்டுதலை பெறுவது நல்லது. ஏனெனில் ஒரு தவறான முடிவு உங்கள் லாபத்தை நஷ்டமாக மாற்றிவிடும். இன்று லாட்டரி, பங்குகள் போன்றவற்றில் உங்கள் பணத்தை முதலீடு செய்யாதீர்கள்.
பரிகாரம்: பசுவிற்கு தீனி வைக்கவும்
தனுசு:
இன்று நேரம் சாதகமாக இருக்கும் என்பதால் அர்ப்பணிப்புடன் உங்கள் வேலையில் கவனம் செலுத்தவும். உங்களின் அறிவு திறன் மற்றும் வழிமுறை நிச்சயம் உங்களுக்கு வெற்றியை தரும். இன்று புதிய வேலை அல்லது திட்டங்களை தொடங்க சிறந்த நேரம். ஊழியர்களுக்கு அலுவலக சூழல் இன்று சரியாக இருக்கும்.
பரிகாரம்: ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யவும்
கும்பம்;
வியாபாரிகளுக்கு இன்று தொழில் சுமாராகவே இருக்கும். இளைஞர்கள் தங்கள் தொழில் சார்ந்த திட்டங்களை இன்று மெனெடுத்து செல்ல ஏற்ற நாள். கடின உழைப்பு காரணமாக வணிக நடவடிக்கைகள் வலுப்படும். வழிமுறையை பொறுத்து இன்று தொழில் வல்லுநர்களின் முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம்: சிவபெருமானுக்கு நீர் வைத்து வழிபடுங்கள்