ரிஷபம்: இன்று உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும். வியாபாரம் தொடர்பான செலவு கூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 3, 7
சிம்மம்: இன்று திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உங்களது வேலையை கண்டு சக கலைஞர்கள் பொறாமை கொள்வார்கள். கடன் பிரச்சனை தீரும். செல்வநிலை உயரும். இறுக்கமான சூழ்நிலை மாறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்: 5
கன்னி: இன்று அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது நன்மை தரும். எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 3
மகரம்: இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
கும்பம்: இன்று எதிர்பார்த்த பணி இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் பிரச்சனைகள் தீரும். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9