ரிஷபம்: இன்று குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள மூன்றாம் நபர் தலையீடு வேண்டாம். தசாபுக்தி அனுகூலமிருப்பின் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்குண்டான ஆலோசனைகள் நடக்கும். பரம்பரைச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் மறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
மிதுனம்: இன்று நண்பர்களிடம் மிகவும் எச்சரிக்கையுடன் பழகுங்கள். உறவினர்களிடம் வீண் விரோதம் வேண்டாம். உடன் பிறந்தவர்களிடம் அன்புடன் பழகுங்கள். அவர்களிடம் பாசம் அதிகரிக்கும். நெருப்பு மற்றும் எலெக்ட்ரிக்கல் சம்பந்தப்பட்ட பொருட்களை கையாளும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
தனுசு: இன்று மிகுந்த நன்மைகள் நடக்கும் காலகட்டமிது. பதவி உயர்வில் சிறிது காலதாமதம் ஏற்படலாம். வேலை இல்லாதவர்களுக்கு, அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற சிறந்த வேலை கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பொதுவில் நன்மையே நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 2, 9
மகரம்: இன்று திருமண வயது வந்தும் திருமணமாகாதவர்களுக்கு தகுந்த வரன் கிடைக்கும். சந்தான பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் அதனால் உயர்பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
மீனம்: இன்று உறவினர்கள் மற்றும் உடன் பணிபுரிவோரால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். உங்களின் குடும்ப சூழ்நிலை நன்றாக இருந்தால்தான் வெளி சூழ்நிலையும் சிறப்பாக இருக்கும். எனவே குடும்பத்தினரிடம் அன்பாகப் பழகுங்கள். நெருப்பு, உஷ்ணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருங்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9