முகப்பு » புகைப்பட செய்தி » ஆன்மிகம் » Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்கான இன்றைய (மார்ச் 10, 2023) ராசிப்பலனை கணித்தவர் பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • 112

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    மேஷம்: இன்று அரசாங்க சலுகைகள் நினைத்தபடி கிடைக்கும். கோர்ட் வழக்குகளில் வெற்றி நிச்சயம். இந்த சமயத்தில் புதிய பட்டம், பதவி உங்களைத் தேடிவரும். உங்கள் முயற்சிகள் எதுவானாலும் வெற்றி பெறும். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து நல்ல செய்தி வரும். தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் இப்போது நடக்கும். ஆரோக்கியம் சம்பந்தமான தொல்லைகள் நீங்கும். வரவேண்டிய பணம் தடையின்றி வரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

    MORE
    GALLERIES

  • 212

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    ரிஷபம்: இன்று நீண்டநாளைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் தாயாரின் உடல்நலம் பாதிக்கும். சிலர் தாங்கள் வாடகை வீட்டை விட்டு சொந்த வீட்டுக்கு குடியேறுவார்கள். தொழில், வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் செல்லநேரும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு தேவை, உடல்நலக் குறைவு ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

    MORE
    GALLERIES

  • 312

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    மிதுனம்: இன்று குடும்பத்தாரின் தேவைகளைக் காலம் அறிந்து நிறைவேற்ற முடியாமல் போகும். அதனால், குடும்பத்தில் குழப்பங்களும் ஒற்றுமைக் குறையும் ஏற்படும். அதன் பயனாக உங்கள் மீது மனக் கசப்பும் வெறுப்பும் ஏற்படும். குடியிருக்கும் வீட்டை சுத்தமாகவும் கவனமாகவும் பார்த்துக்கொள்வது நல்லது. விஷ ஜந்துகளால் யாருக்காவது விஷக்கடி ஏற்படக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

    MORE
    GALLERIES

  • 412

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    கடகம்: இன்று அத்தியாவசியச் செலவுகளுக்கு பணம் இல்லாமல் போய் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படலாம். கொடுக்கல்-வாங்கலில் சிக்கல் உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள் எச்சரிக்கையோடு முக்கிய முடிவுகளை எடுக்காவிட்டால் திண்டாட நேரும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகமாகும். அதன் காரணத்தால் மேலதிகாரிகளிடமும் சக தொழிலாளர்களிடமும் சுமுக நிலை மாறி நிம்மதியற்ற சூழ்நிலை காணப்படும். சிலர் அலுவலகப் பிரச்சினை வேறு இடத்துக்கு பணிமாற்றம் செய்யப்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

    MORE
    GALLERIES

  • 512

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    சிம்மம்: இன்று உடல்நலத்தில் கவனம் தேவை. புதிதாகத் தொழில் செய்யநினைப்பவர்கள் கவனத்துடன் செயலாற்றவேண்டும் கூட்டுத்தொழில் செய்பவர்கள் கணக்குவழக்குகளை சரியாக வைத்துக்கொள்ளாவிட்டால் கூட்டாளிகள் விலக நேரும். தேவையில்லாத இடமாற்றம் வரும். கணவன்-மனைவியிடையே கருத்து வேற்றுமை தோன்றி மறையும். சகோதரர்களிடையேயும் பிளவு ஏற்படலாம். மனக் குழப்பங்கள் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

    MORE
    GALLERIES

  • 612

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    கன்னி: இன்று நற்பலன்கள் நடக்க வாய்ப்புண்டு. தந்தையின் உடல்நலம் மேன்மையடையும். தந்தை மற்றும் தாய்வழி உறவுகள் சிறக்கும். அவர்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் மேன்மையடையும். தொழில் சம்பந்தமான வெளிநாட்டு பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் கிடைக்கும். வெளிநாட்டில் ஏற்றுமதி வாணிபம் செய்து வருபவர்களுடன் வர்த்தக் உறவு மேம்பட்டு சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் வரும். சிலருக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

    MORE
    GALLERIES

  • 712

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    துலாம்: இன்று கௌரவப் பட்டங்களும் பதவி, பொறுப்புகளும் கிடைக்கும். ஞானிகள், சாதுக்களின் தரிசனமும் ஆசியும் கிடைக்கும். சிலர் தீர்த்த யாத்திரை சென்று வருவார்கள். பூர்வீகச் சொத்தினால் ஆதாயமும் மேன்மையும் கிடைக்கும். சிலர் இந்த சமயத்தில் தர்ம நியாயங்களுக்கு உட்பட்டு பணம் தேடுவார்கள். எதிர்பாராத வருமானம் ஈட்டுவார்கள். அரசாங்கம், அரசாங்க அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகளால் தொல்லை ஏற்பட வாய்ப்புண்டு. உங்களுடைய எதிரிகளும்கூட உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு குறையும். இந்த நேரத்தில் ஊதிய உயர்வு, பணி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

    MORE
    GALLERIES

  • 812

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    விருச்சிகம்: இன்று அலுவலகத்தில் சுமுகமான நிலை ஏற்படும். உடன் வேலை செய்பவர்களால் உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும். செய்யும் தொழிலில் அதிக லாபம் வரும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். கணவன்-மனைவி உறவு நெருக்கம் அதிகரிக்கும். மனைவி வழி உறவினரால் நன்மை கிடைக்கும். இதுவரை குழந்தை இல்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு கூட்டுத்தொழில் வாய்ப்பு கிடைக்கும். நல்ல கூட்டாளி கிடைப்பார். புதிய வண்டி வாங்குவார்கள். சிலர் புதிய வீடுகட்டி கிரகப்பிரவேசம் செய்வார்கள். புதிய ஆடை ஆபரணம் வாங்குவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

    MORE
    GALLERIES

  • 912

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    தனுசு: இன்று மாமன் வழி உறவினர்களால் தற்போது உதவிகள் கிடைக்கும். தொழிலாளிகள், வேலைக்காரர்களால் நன்மை கிடைக்கும். மாற்றுமத நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றும். உங்கள் முகத்தில் உள்ள பொலிவு அனைவரையும் கவர்ந்திழுக்கும். தொழிலில் மேன்மை ஏற்படும். நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். பெரியோர்கள் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் இப்போது அதற்கான வேலைகள் நடக்கும். மனதில் தைரியமும் செயலில் சுறுசுறுப்பும் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

    MORE
    GALLERIES

  • 1012

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    மகரம்: இன்று நல்ல வருமானம் கிடைப்பதுடன், பல பொறுப்பான பதவிகளும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் வந்து சேரும். உங்களுக்கு அதிகாரமான பதவி அந்தஸ்து முதலியவை உண்டாகும். உங்களுடைய முயற்சி இல்லாமலே வருமானம் உங்களைத் தேடி வரும். எந்த விஷயமாக இருந்தாலும் அதில் வெற்றிபெற்று சாதனை வீரராக வலம் வருவார்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

    MORE
    GALLERIES

  • 1112

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    கும்பம்: இன்று கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். தந்தை உடல்நலம் பெறுவார். மருத்துவச் செலவுகள் குறையும். மாமன் மற்றும் மாமன் வழி உறவினர்களால் சில நன்மைகள் கிடைக்கும். அரசு வங்கியில் கடன்பெற்று தொழில் தொடங்கவும் இது நல்ல நேரம். இதுவரை அனுபவித்து வந்த துன்பம், தொல்லை, வறுமை அனைத்தும் நீங்கி வளம் பெறுவீர்கள். இதுவரை குடத்துக்குள் இட்ட விளக்காக உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரியாமல் இருந்த நிலை மாறி இனிமேல் குன்றின் மேலிட்ட விளக்காக உங்கள் திறமைகள் வெளி உலகுக்குத் தெரிய வரும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

    MORE
    GALLERIES

  • 1212

    Today Rasi Palan : இந்த ராசியினருக்கு இன்று (மார்ச் 10, 2023) உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.!

    மீனம்: இன்று சொன்னது சொன்னவாறு நடந்துகொண்டு உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்வீர்கள். அதனால் நாணயம்மிக்கவர் என்று பெயரெடுப்பீர்கள். இதுவரை வராமல் இருந்த கடன்கள் இப்போது வசூலாகும். தற்போது உங்களுக்கு எதிராக உங்கள் எதிரிகளால் செய்யப்படும் காரியங்கள் கூட சாதகமாக உங்களுக்கு மாறி உங்களை மேம்படுத்தும். அலைச்சல் அதிகரிக்கும். குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்பி நிம்மதியற்ற சூழ்நிலை நிலையை சனி உருவாக்குவார். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

    MORE
    GALLERIES