மேஷம்:
உங்களின் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு அழகான நாள். இன்று உங்கள் நல்ல எண்ணங்களை பதிவு செய்ய தொடங்கலாம். அது விரைவில் உங்களின் சிறந்த பழக்கமாக மாறலாம். உங்கள் பணியிடத்தில் உங்களுக்கான மதிப்பும் புகழும் இன்று கிடைக்கும். இன்றைய தினம் ஒரு புதிய அறிமுகத்தையும் கொண்டு வரும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு முத்து
ரிஷபம்:
உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளுக்கு சில அறியப்படாத காரணிகள் காரணமாக இருக்கலாம். எதை செய்தாலும் அதை பல முறை யோசித்து செய்யுங்கள். உங்களின் முடிவுகளைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அந்த அளவிற்கு உங்களின் அறிவு திறன் உதவும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்- ஒரு நீல மாணிக்கம்
மிதுனம்:
இன்று உங்களுக்கான சில கல்வி வாய்ப்புகள் தேடி வரலாம். இது உங்கள் அறிவு அல்லது திறனை மேம்படுத்துவதில் உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களிடம் உள்ள நல்ல மனிதர்கள் உங்களுக்கு இன்று உதவியாக இருப்பார்கள். தூரத்தில் உள்ள நண்பர்கள் உங்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த அனுபவத்தை தரலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கருப்பு டூர்மேலைன்
கடகம்:
உங்களின் பணியிடத்திலிருந்து ஒரு உற்சாகமான அறிவிப்பு உங்களை இன்று தேடி வந்து உற்சாகப்படுத்தும். உங்களுக்குள் ஒரு புதிய உற்சாகத்தை உருவாக்குவதை நோக்கி உங்களின் ஆற்றல்களை பயன்படுத்துங்கள். எந்தவொரு முக்கியமான முடிவை எடுப்பதற்கு முன், உங்கள் குடும்பத்தினர் ஆலோசனையைப் கேட்பது நல்லது.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு விளக்கு நிழல்
சிம்மம்:
வரவிருக்கும் குடும்ப நிகழ்விற்கான உங்களின் சிறப்பான ஏற்பாடுகள் மற்றவர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்று தரும். இன்றைய தினத்திற்கான உங்கள் முன்னுரிமைகளை சரியாக வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். உங்களுக்கான வழக்கத்தை பின்பற்றுவதில் நீங்கள் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஜாடி
கன்னி:
வேலையில் சில தீவிரமான பிரச்சனைகள் ஏற்படலாம். இவற்றில் உங்கள் கவனம் நிச்சயம் தேவைப்படலாம். நீங்கள் போதுமான அளவு தூங்குவதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அப்போது தான், நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். சில தேவையற்ற வேலைகளை கைவிட முயற்சியுங்கள். உங்களின் நண்பர்களுடன் இன்று நேரத்தை செலவிடுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு தோட்டம்
துலாம்:
இன்று உங்கள் நெருங்கிய மற்றும் அன்புக்குரியவர்களுக்கு உங்களிடமிருந்து அதிக கவனம் தேவைப்படலாம். அவர்களிடம் ஏதேனும் தவறான புரிதல்கள் இருந்தால் அவற்றை தெளிவுப்படுத்துங்கள். ஆக்கப்பூர்வமான் செயல்களை செய்து உங்கள் மனதை புத்துணர்ச்சி பெற செய்யுங்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, ஒரு சிறிய பயணத்தைத் திட்டமிடுங்கள். இது மன நிம்மதியை தரும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்- ஒரு அணில்
விருச்சிகம்:
சிக்கல்களை தவிர்த்து, மற்றவர்களுக்காகவும், உங்களுக்காகவும் மகிழ்வாக வாழ முயற்சியுங்கள். நீங்கள் ஒரு புதிய வழக்கத்திற்கு மாற முயற்சி செய்தால், சில காலங்களுக்கு அவை உங்களுக்கு கடினமாக இருக்கலாம். இன்று உங்கள் மேலதிகாரிகளின் அனுகூலத்தை பெற வாய்ப்பு உள்ளது. திறனுடன் செயல்பட நேர மேலாண்மை மிகவும் அவசியம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு கிளி
தனுசு:
உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய மற்றும் சுவாரஸ்யமான நபரின் அறிமுகம் கிடைக்கலாம். உங்கள் வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் நீங்கள் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். சில வெளியாட்களின் குறுக்கீடு உங்களை பெரிதும் எரிச்சலடையச் செய்யலாம். எனவே நிதானமாக இருக்க முயற்சியுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு சிவப்பு உடை
மகரம்:
மிகவும் ஆற்றல் நிறைந்த நாளாக இன்று இருக்கும். புதுமையான யோசனைகள் உங்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாம். உங்களின் திறனை கொண்டு பலவித சாகசங்களை செய்ய வேண்டிய நேரம் இது. சரியான நபர்களைச் சந்திப்பது இந்த நாளின் சிறப்பம்சமாக இருக்கலாம்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மஞ்சள் நீலக்கல்
கும்பம்:
நீங்கள் யாரையாவது அழைக்க வேண்டும் நினைத்து தள்ளிப் போட்டுக் கொண்டிருந்த நபரை இன்று அழைத்து பேசலாம். மருத்துவ ரீதியாக இப்போது உங்களுக்கு சில உடற்பயிற்சி அவசியம். உங்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் பணிபுரியும் இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் இன்று உங்களை தேடி வரும்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம்- ஒரு பச்சை கூழாங்கல்
மீனம்:
இன்று மிகவும் பிஸியான நாளாக இருக்கும். இருப்பினும் உங்களின் இலக்கை நோக்கி நீங்கள் சரியாக சென்று கொண்டிருப்பீர்கள். இன்று பகலில் நீங்கள் வெளியில் செல்ல வாய்ப்புள்ளது. உங்களுக்கான வேலை அழுத்தம் கூடும், ஆனால் உங்களுக்கு போதுமான உதவி கிடைக்கும். எதை செய்தாலும் நிதானமாக செய்ய முயற்சியுங்கள்.
உங்களுடைய அதிர்ஷ்டத்திற்கான அடையாளம் - ஒரு மரகத கல்