மேஷம்:
பணியிடத்தில் எதிர்பார்த்ததை விட இன்று நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். முதலீடு சம்பந்தமான முயற்சிகள் எதையும் இன்று தவிர்க்கவும். உங்கள் கண்ணியம் மற்றும் நேர்மை உங்களை வியாபாரத்தில் வெற்றி பெற வைக்கும். நெருங்கிய நண்பர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.
பரிகாரம் - ஸ்ரீ சுக்தா பாராயணம் செய்யவும்
ரிஷபம்:
உங்கள் தொழிலில் இன்று ஏற்படும் முன்னேற்றத்தால் உற்சாகமாக இருப்பீர்கள். பணியிடத்தில் அதிக நேரம் செலவிடுவீர்கள்.பணியிடத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். புதிய திட்டங்கள் காரணமாக உங்களுக்கு நிதி ஆதாயங்கள் இருக்கும். பேச்சில் கவனம் தேவை.
பரிகாரம் - அனுமனுக்கு நெய் தீபம் ஏற்றவும்
மிதுனம்:
நீண்ட நாட்களாக வேலை மாற வேண்டும் என்று நீங்கள் நினைத்து கொண்டிருந்தாள் அதற்கான சாதக வாய்ப்புகள் இன்று உங்களுக்கு கிடைக்கும். சிறந்த முதலீட்டு வாய்ப்புகளும் இன்று உங்களை வந்து சேரும். பணியிடத்தில் அதிக நேரம் செலவிடுவதால் நிதி நன்மைகள் கிடைக்க பெறுவீர்கள்.
பரிகாரம் - விநாயகருக்கு அருகம்புல் வைத்து வழிபடுங்கள்
கடகம்:
உங்களது வேலைகளை விவேகத்துடன் முன்னெடுப்பதால் சிறந்த பலன்களை பெறுவீர்கள். சர்ச்சைக்குரிய விஷயங்களை தலையிடாமல் தவிர்க்கவும். நிதி விஷயங்களில் முன்னெப்போதையும் விட இன்று தெளிவு அதிகரிக்கும். அன்புக்குரியவர்களின் ஆலோசனையை பின்பற்றுங்கள். தொழில் வியாபாரம் நிலையாக இருக்கும்.
பரிகாரம் - சூரிய பகவானுக்கு நீர் வைத்து வழிபடுங்கள்
சிம்மம்:
அலுவலகத்தில் இன்று உங்களுக்கு புதிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டால் தயங்காமல் ஏற்று கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் சக்தி மற்றும் திறமை வெளிப்படும். நிலம் தொடர்பான ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். இன்று அதீத உற்சாகத்தைத் தவிர்த்து இயல்பாக இருக்க முயற்சி செய்யுங்கள்.
பரிகாரம் - மாற்று திறனாளிகளுக்கு தேவைப்படும் உதவிகளை செய்யுங்கள்
கன்னி:
இன்று வியாபாரிகளுக்கு தொழில் சுறுசுறுப்பாக செல்லும், வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். விடாமுயற்சியை கடைப்பிடிக்க வேண்டிய நாள். நிதி விஷயங்களில் இன்று சற்று பொறுமை காக்கவும். பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தவும்.
பரிகாரம் - எறும்புகளுக்கு தீனியாக வைக்கும் மாவில் சர்க்கரை சேர்க்கவும்
துலாம்:
இன்று வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் வெற்றி சதவீதம் அதிகமாக இருக்கும். சக ஊழியர்களின் ஆதரவு உங்களக்கு தொடரும். தொழில் வியாபாரம் சூடுபிடித்து வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். வருமானம் சீராக இருக்கும்.
பரிகாரம் - எறும்புகளுக்கு தீனியாக வைக்கும் மாவில் சர்க்கரை சேர்க்கவும்
விருச்சிகம்:
முக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். கொடுக்கல் வாங்கல்களில் விவேகமாக இருக்க வேண்டும். வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிறருடன் சமத்துவ உணர்வை பேணுங்கள். நிர்வாகத்தில் திறம்பட செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பரிகாரம் - பசுமாடுகளுக்கு தீவனம் வைக்கவும்
கும்பம்:
இன்று உங்களது விவேகம் மற்றும் சுறுசுறுப்பால் அனைவரும் ஈர்க்கப்படுவார்கள். கொடுக்கப்படும் வேலைகளை கவனமாக செய்வற்கு முக்கியத்துவம் கொடுங்கள். வியாபாரிகளுக்கு இன்று தொழில் வேகமெடுக்கும். உங்களது தீவிர முயற்சிகளுக்கு நெருக்கமானவர்களின் ஆதரவு கிடைக்கும்.
பரிகாரம் - கால்நடைகளுக்கு தீவனம் கொடுங்கள்
மீனம்:
உங்களுக்கு இன்று ஒத்துழைப்பு மனப்பான்மை தேவை. இதுவே உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தை விரைவுபடுத்தும். முதலீடு விஷயங்களில் கவனமாக இருக்கவும். வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நபர்களுக்கு இன்று நல்ல செய்து கிடைக்கும். எதிலும் அவசரம் காட்டாதீர்கள்.
பரிகாரம் - மஞ்சள் நிற உணவுகளை தானம் செய்யுங்கள்